“திமுகவின் அலட்சியத்தால்தான் சி.பி.ஐ உள்ளே வந்தது” கொள்கை எதிரியுடனே கூட்டணியா!? - புட்டு புட்டு வைத்த பத்திரிகையாளர் மணி!!

ஏற்கனவே பொங்கலுக்கு பிறகு அதிமுக - தவெக இணையும் என்ற கருத்தும்.....
2026 election
2026 election
Published on
Updated on
2 min read

2026 சட்டமன்ற தேர்தல் நாம் இதுவரை பார்க்காத தனித்துவமான தேர்தலாக அமையும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இந்த தேர்தலை தனித்துவமாகியதில் முக்கிய பங்கு விஜய்க்கு உண்டு என்பதில் எந்த மாற்றமும் இல்லை. அவர் திமுக மட்டுமின்றி அதன் கூட்டணி கட்சிகளுக்கும்  மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளார்.

கடந்த செப்டம்பர் 27 அன்று தவெக தலைவர் விஜய், நாமக்கல் கரூர் பகுதிகளில் பரப்புரை மேற்கொண்டார். கரூரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிக அளவு மக்கள் கூடிவிட்டனர். அந்த கூட்ட நெரிசலில் சிக்கி குழந்தைகள் பெண்கள் உட்பட 42-பேர் உயிரிழந்துவிட்டனர். இந்த விவகாரத்தை விசாரிக்க முன்னாள் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் ஆணையமும் அமைக்கப்பட்டது. அதோடு சிறப்பு புலனாய்வு குழுவும் அமைக்கப்பட்டுள்ளது, இந்த விவகாரம் குறித்த பல வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நடந்து வந்தது.

இதில் தற்போது தீர்ப்பளித்துள்ள ஜே.கே. மஹேஸ்வரி, என்.வி. அஞ்சாரியா அமர்வு கரூர் சம்பவத்தை விசாரிக்க சிபிஐக்கு உத்தரவிட்டுள்ளது. மேலும் இது குறித்து விசாரிக்க உச்சநீதிமன்ற தலைமையிலும் ஒரு குழு அமைகப்பட்டுள்ளது. இந்த சிறப்பு குழுவில் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி மற்றும் ஓய்வு பெற்ற இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் இடம் பெறுவார்கள் என தகவல் வெளியாகியுள்ளன. குறிப்பாக ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள் தமிழகத்தை பூர்விகமாக கொண்டவர்களாக இருக்க கூடாது என நிபந்தனையும் விதித்துள்ளது.

மேலும் இந்த விவகாரத்தில், சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி செந்தில்குமார் சொன்ன கருத்துக்களை எதிர்த்துதான் தவெக உச்சநீதிமன்றம் சென்றது, கரூர் சம்பவம் ஒரு ‘Man Made Disaster’, விஜய்  -க்கு கொஞ்சம்கூட தலைப்பண்பு இல்லை என விமர்சித்திருந்தது. அதுவரை கரூர் சம்பவத்திற்கு திமுக மட்டுமே காரணம் என்றிருந்த சூழல் மாறி விஜய் -ம் அது முதல்தான் விமர்சிக்கப்பட்டார்.

ஆனால் நீதிமன்றம் அந்த முறையீட்டை  கிடப்பில் போட்டுள்ளது. மேலும் இந்த மனுக்களை எல்லாம் ஆய்ந்த  உச்சநீதிமன்ற நீதிபதி மகேஸ்வரி, “உயர்நீதிமன்ற மதுரை கிளையிலிருந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் எப்படி விசாரித்தது, SIT (சிறப்பு புலனாய்வு குழு) கேட்ட இடத்தில் Sop கொடுக்கப்பட்டது ஏன் என பல கேள்விகளை  எழுப்பியது? மேலும் தவெக -வின் கோரிக்கையை ஏற்று நீதிமன்றம் இந்த உத்தரவு பிறப்பிக்கவில்லை. பாதிக்கப்பட்டவர்களும் வழக்கு தொடர்ந்திருந்தனர், சாமானிய தனி மனிதரின் கோரிக்கையை முன்னிலைப்படுத்தியே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.  இந்த சூழலில்தான் நீதிமன்றம் அமைத்த புலனாய்வு குழுவை சற்று உற்றுநோக்க வேண்டும், இது வெறும் SIT மட்டுமல்ல CBI -உடன் கூடிய ஒரு விசாரணை குழுவாக அமைந்துள்ளது. கரூர் விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஏன் இத்துணை தீவிரமாக இந்த விவகாரத்தில் தலையிடுகிறது என்ற கேள்வியும் எழாமல் இல்லை.

யாருக்கு பின்னடைவு 

கரூர் துயரச்சம்பவம் குறித்தான வழக்கு, சிபிஐ -க்கு மாற்றப்பட்டது யாருக்கு பின்னடைவு என்பது குறித்து, தனியார் யூடியூப் சேனலிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் மணி, “உண்மையில் இது திமுக -விற்குத்தான் பின்னடைவு. இது அவர்களுக்கும் நன்றாகவே தெரியும். 75 ஆண்டுகால கட்சி இப்படி ஒரு தவறை செய்திருக்க கூடாது. எல்லா உடனடி தேவைகளையும் அரசு விரைந்து செயல்படுத்தியது, ஆனாலும் அவர்கள் அறிந்து வைத்திருக்க வேண்டும் 41 -பேர் மரணம் என்பது சாதாரண விஷயம் அல்ல, இது நிச்சயம் உச்சநீதிமன்றம் செல்லும், எனவே ஒரு உயர்மட்ட சி.பி.சி.ஐ.டி -விசாரணைக்கு உத்தரவிட்ருக்க வேண்டும். அதனால்தான் இந்த விவகாரத்தில் மீண்டும் மீண்டும் அரசியல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தோற்றுவிட்டது.  மேலும் கரூர் விவகாரம் முழுக்க முழுக்க ஒரு அரசியல் பிரச்சனை. எல்லா கட்சிகளும் இதைவைத்து அரசியல் செய்கின்றன” என பேசியுள்ளார்.

மேலும் விஜய் உண்மையிலே இக்கட்டான சூழலில் தான் உள்ளார். இந்த சட்ட மற்றும் அரசியல் சிக்கலிலிருந்து எப்படி மீளுவார்? என்ற கேள்வியும் உள்ளது. ஆனால், விஜய் -க்கு பாஜக உறுதுணையாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே பொங்கலுக்கு பிறகு அதிமுக - தவெக இணையும் என்ற கருத்தும் உலவி வருகிறது. NDA கூட்டணியில் உள்ள அதிமுக -உடன் விஜய் இணைந்தால் அவர் இதுவரை விமர்சித்து வந்த ‘கொள்கை எதிரி’ உடனே கூட்டணி வைப்பதாக ஆகிவிடும். எனவே பொங்கலுக்கு பிறகு இந்த கொஊதாநி பிரச்சனையை முடித்துவிட வேண்டும் என தவெக -வினர் நினைப்பதாக கூறப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com