"செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்ய 4 நாட்கள் ஆகும்" மா.சுப்ரமணியன் தகவல்!

"செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்ய 4 நாட்கள் ஆகும்" மா.சுப்ரமணியன் தகவல்!
Published on
Updated on
1 min read

செந்தில் பாலாஜிக்கு அறுவை சிகிச்சை செய்ய 4 நாட்கள் ஆகும் என சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

அரசு கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியின் 58 ஆவது பட்டமளிப்பு விழா கிண்டி எம்.ஜி.ஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் செய்யதியாளர்களை சந்தித்தார். 

அப்போது பேசிய அவர், நேற்றிரவு முதல் செந்தில் பாலாஜி நீதிமன்ற அனுமதியோடு தனியார் மருத்துவமனைக்கு மாற்றி சிகிச்சை பெற்று வருகிறார். இரத்த நாள அடைப்பு இருப்பதால் ஓமந்தூரார் மருத்துவமனையில்  செந்தில் பாலாஜிக்கு Blood thinner எனப்படும் ரத்த அடர்த்தியை குறைக்கும் மருந்துகளை கொடுத்து வந்தார்கள். இந்த மருந்துகள் தொடர்ந்து கொடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தால் உடனடியாக Bypass அறுவை சிகிச்சை செய்ய முடியாது என தெரிவித்தார்

மேலும், நேற்று இரவு காவேரி மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட உடன் Blood thinner மருந்துகளை நிறுத்தியிருக்கிறோம் என அந்த  மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மருந்துகளை நிறுத்தி இன்னும் 3 முதல் 4 நாட்கள் பராமரிப்பில் வைத்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.  மேலும் எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் வேண்டுமானால் பரிசோதித்துக் கொள்ளட்டும் என நீதிமன்றத்திலேயே வழக்கறிஞர் தெரிவித்துள்ளதாக கூறிய அவர், இதுவரை எம்ய்ஸ் மருத்துவர்கள் யாரும் வரவில்லை என தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com