
கடந்த ஆகஸ்ட் 21 -ஆம் தேதி விஜய் -ன் தவெக கட்சியின் 2 -ஆவது மாநில மாநாடு மதுரை பாரபத்தியில் நடைபெற்றது. இதில் பேசிய விஜய் அதிமுக -வை அடிமை கூட்டணியில் உள்ளது என விமர்சித்துள்ளார். இதனால் அதிமுக -வினர் எரிச்சல் அடைந்துள்ளனர்,
இந்நிலையில் இவரின் பேச்சுக்கு காத்திரமாக பதில் அளித்துள்ளார், கே.டி.ராஜேந்திர பாலாஜி, விஜய் -ன் பேச்சுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கே.டி.ராஜேந்திர பாலாஜி, “விஜய் இன்னும் விளையாட்டுப் பிள்ளையாக இருக்கிறார் என்பதற்கு அடையாளமாக மதுரை மாநாட்டில் விஜயின் நடவடிக்கை இருந்தது. வலுவான அரசியல் இயக்கமாக நடத்தக்கூடிய ஆற்றல் விஜயிடம் இருப்பது போல் தெரியவில்லை.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தினசரி ஒரு மாவட்டத்திற்கு சென்று வருகிறார், அப்படிப்பட்ட தலைவரை அடையாளம் தெரியாத தலைவரை பேசுவது போல் பேசுவது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது. அதிமுகவைப் பற்றி விஜய் பேசுவது சிறுபிள்ளைத்தனமாக உள்ளது.
54 ஆண்டுகள் களம் பயின்று 31 ஆண்டுகள் தமிழகத்தை ஆண்ட அதிமுகவைப் பற்றி குறைத்து மதிப்பிட்டு பேசுவது விஜயின் வீழ்ச்சிக்கு முதல் படியாக உள்ளது.
விஜய்க்கு எந்த ஒரு வெற்றியும் கிடைக்கும் வாய்ப்பு அவரது பேச்சில் தெரியவில்லை. ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர் எடப்பாடி பழனிச்சாமியை பார்த்து ஏளனமும் நையாண்டியும் பேசினார்கள், ஆனால் தற்போது அவர் மேற்கொண்டு வரும் மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தை பார்த்து பாரம்பரிய ஆளும் திமுக கட்சியினரே மிரண்டு போய் கிடக்கு நிலையில் ஒன்றரை வயதுள்ள தொட்டில் குழந்தையாக இருக்கும் விஜய் அதிமுக கட்சியின் தலைமையைப் பற்றி பேசுவது கேலிக்குரியது.
அவரது பேச்சால் எந்த செயலும் மடங்கி பெறாது.எங்களை எதிர்த்து யாரும் இல்லை என சொல்லலாம் ஆனால் களத்தில் நிற்க முடியாது-தவெகவுக்கும் திமுகவுக்கு விடையை மட்டும் தான் போட்டி என விஜய் தெரிவித்த கருத்திற்கு பதிலடி தந்துள்ளார்.இதே போல் பேசிய அதிகம் பேரை நாங்கள் பார்த்துள்ளோம்.
அதிமுகவை பற்றி சிறுபிள்ளைத்தனமாக பேசியவர்கள் அடையாளம் தெரியாமல் போன வரலாறு உள்ளது. அதிமுகவின் வரலாற்றுக்கு மிகப்பெரிய சரித்திரம் உள்ளது. அதிமுக எடப்பாடி யார் தலைமையில் தலைமையில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் அதற்கான அறிகுறிகள் தற்போது தென்படுகின்ற.
இதைப் பார்த்து பொறாமைப்படும் ஒரு சிலர் எழுதிக் கொடுக்கும் வசனங்களை மதுரையில் பேசி நடித்துவிட்டு விஜய் சென்றுள்ளார்.
விஜய்யின் பேச்சில் அரசியல் கருத்துக்களும் இல்லை, மக்களை கவரக்கூடிய எதிர்கால திட்டமும் இல்லை.
விஜய் விளையாட்டுப் பிள்ளை போல் பேசி வருகிறார்
சினிமாவில் என்ன விளையாட்டுத்தனம் செய்வாரோ அதே விளையாட்டு தனத்தை அரசியலிலும் செய்கிறார்.
அனைவரும் மாநாட்டை முடித்துவிட்டு முன் வாசல் வழியாக செல்வார்கள் ஆனால் விஜய் பின் வாசல் வழியாக செல்கிறார்.
எந்த வழியாக செல்ல வேண்டும் எந்த வழியாக வரவேண்டும் என்பது கூட தெரியவில்லை. மீடியாக்களின் அதீத போக்கஸ் விஜய்க்கு சிக்கலை உருவாக்கும். எத்தனையோ பேர் கட்சியை துவக்கினார்கள் யாராவது ஆள முடிந்ததா அதிகாரத்திற்கு வர முடிந்ததா? அந்த "தில்" அதிமுகவிற்கும் திமுகவிற்கும் மட்டுமே உள்ளது. கூட்டணி ஆட்சி என அமித்ஷா கூறியது குறித்த கேள்விக்கு, “ வடக்கே உள்ள தலைவர்கள் பேசும்போது மொழிபெயர்க்கும் போது கருத்துக்கள் மாறி சொல்லப்படும் ஏற்கனவே தெளிவாக பேசப்பட்டுள்ளது. அதிமுக தனி பெரும்பான்மையோடு எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி அமைப்பார்.
அதிமுக ஆட்சி தான் அமையும். பாஜக எங்களுக்கு அடுத்த இடத்தில் வருவார்கள். எங்களது கூட்டணி கட்சிகள் அதிகமான இடங்களில் வெற்றி பெறும்” என பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.