தமிழகத்தை விஞ்சும் 'ஜெயிலர் 2' கேரள முன்பதிவு.. 'மோகன்லால் தான் காரணம்' என பற்றவைத்த ரசிகர்கள் - உண்மை காரணம் என்ன?

கேரளாவில் உள்ள பல திரையரங்குகளில் முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், காட்சிகளை அதிகரிப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
Jailer 2 Kerala Advance Booking Surpasses Tamil Nadu: Fans Blame Mohanlal—What Is the Real Reason?
தமிழகத்தை விஞ்சும் 'ஜெயிலர் 2' கேரள முன்பதிவு.. 'மோகன்லால் தான் காரணம்' என பற்றவைத்த ரசிகர்கள் - உண்மை காரணம் என்ன?
Published on: 
Updated on: 
2 min read

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகவிருக்கும் ஜெயிலர் திரைப்படம் கேரளாவில் மிகப் பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றுள்ளது. டிக்கெட் முன்பதிவு தொடங்கிய முதல் நாளிலேயே ரூ.4 கோடிக்கு வர்த்தகம் நடைபெற்றிருக்கிறது. இந்த அபாரமான தொடக்கத்தால் பல திரையரங்குகள் அதிகத் திரைகளில் திரையிடத் திட்டமிட்டு வருகின்றன. திருச்சூரில் உள்ள ஒரு திரையரங்கம் 24 மணி நேரம் தொடர்ந்து திரையிடத் திட்டமிட்டுள்ளது.

அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகும் ஜெயிலர் திரைப்படத்தை, கேரளாவில் விநியோகிக்கும் பொறுப்பை ஸ்ரீ கோகுலம் மூவீஸ் நிறுவனம், விநியோகக் கூட்டாளியான ட்ரீம் பிக் ஃபிலிம்ஸுடன் இணைந்து மேற்கொள்கிறது.

புக்மைஷோ, ஸோமேட்டோவின் டிஸ்ட்ரிக்ட், டிக்கெட்நியூ மற்றும் திரையரங்க கவுன்ட்டர்கள் மூலம் டிக்கெட் முன்பதிவு நடைபெற்று வருகிறது. முன்பதிவு தொடங்கிய ஒரு மணி நேரத்திலேயே ஒரு லட்சம் டிக்கெட்டுகள் விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

‘ஜெயிலர் 2’ திரைப்படம், ஸோமேட்டோவின் ‘டிஸ்ட்ரிக்ட்’ தளத்தில் ‘அதிக எதிர்பார்ப்புள்ள படம்’ என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளதுடன், புக்மைஷோவிலும் தொடர்ந்து கவனத்தை ஈர்த்து வருகிறது.

கேரளாவில் உள்ள பல திரையரங்குகளில் முதல் நாள் காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், காட்சிகளை அதிகரிப்பது குறித்தும் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.

திருச்சூரில் உள்ள ராகம் திரையரங்கம், ரசிகர்களுக்காக முதல் நாளில் 24 மணி நேரம் தொடர்ந்து திரையிடத் திட்டமிட்டுள்ளது.

கொச்சி, திருவனந்தபுரம், கோழிக்கோடு, திருச்சூர், கண்ணூர் மற்றும் கோட்டயம் ஆகிய இடங்களில் உள்ள திரையரங்கு உரிமையாளர்களும் முன்பதிவில் கணிசமான ஆர்வம் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர். பல இடங்களில் டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகி வருவதால், படம் வெளியாவதற்கு முன்பாக மேலும் பல காட்சிகள் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் இதுவரை 242 நகரங்களில் உள்ள 771 திரையரங்குகளில், 4,843 காட்சிகளுக்காகச் சுமார் 5.69 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. உலகம் முழுவதும் இதுவரை ரூ.30 கோடிக்கு டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

மலையாள ரசிகர்களிடையே ரஜினிகாந்த் மீதான ஈர்ப்பு இருந்தாலும், இந்தப் படத்தில் மோகன்லால் இடம்பெற்றிருப்பது கேரளாவில் டிக்கெட் விற்பனை அதிகரிக்க முக்கியக் காரணம் எனக் கூறப்படுகிறது.

ஜெயிலர் முதல் பாகத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்த மோகன்லால், இரண்டாம் பாகத்திலும் மீண்டும் நடிக்கிறார். டிரெய்லரில் அவர் மாஸ் ஆக்ஷன் கதாபாத்திரத்தில் வருவது ரசிகர்களை ஈர்த்துள்ளது.

ரஜினி மற்றும் மோகன்லாலைத் திரையில் இணைந்து பார்ப்பது ரசிகர்களிடையே ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. முதல் பாகத்தில் நடித்த சிவராஜ்குமாரும் இந்தப் பாகத்தில் இடம்பெறுகிறார்.

அவர்களுடன் சூரஜ் வெஞ்சாரமூடு, எஸ்.ஜே. சூர்யா, வித்யா பாலன், மிதுன் சக்ரவர்த்தி, யோகி பாபு மற்றும் ஹக்கீம் ஷாஜஹான் ஆகியோரும் நடிக்கின்றனர். கேரளாவில் அக்டோபர் 15ஆம் தேதி காலை 6 மணிக்கு ஜெயிலர் 2 படத்தின் முதல் காட்சி தொடங்குகிறது.

Jailer 2 Kerala Advance Booking Surpasses Tamil Nadu: Fans Blame Mohanlal—What Is the Real Reason?
224 ரன்களைக் குவித்தும் நிம்மதியில்லை... வெற்றிக்குப் பிறகும் இந்திய அணிக்கு ஷ்ரேயஸ் ஐயர் விடுத்த எச்சரிக்கை!

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com