“ஜனநாயகன் படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப உத்தரவு” - தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்த தலைமை நீதிபதிகள்… மீண்டும் தொடரும் சிக்கல்!

தணிக்கை வாரியத்திற்கு போதுமான அவகாசத்தை தனி நீதிபதி வழங்க வேண்டும்...
“ஜனநாயகன் படத்தை மறு ஆய்வுக்கு அனுப்ப உத்தரவு” - தனி நீதிபதி தீர்ப்பை ரத்து செய்த தலைமை நீதிபதிகள்… மீண்டும் தொடரும் சிக்கல்!
Published on
Updated on
1 min read

தொடர்ந்து நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' திரைப்படத்தை வெளியிடுவதற்கு தடை நீடித்து வரும் நிலையில் கடந்த (ஜனவரி 9) ஆம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் படத்திற்கான தணிக்கை சான்றிதழ் வழங்கப்படாத நிலையில் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்த நிலையில் கடந்த 20 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட நிலையில் படக்குழு மற்றும் தணிக்கை வாரிய குழு தங்களது தரப்பு வாதங்களை முன்வைத்தனர்.

அதனை தொடர்ந்து இந்த வழக்கின் தீர்ப்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்த நிலையில் தற்போது இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் தணிக்கை வாரியத்தின் மனு அடிப்படையில் “படத்தை மீண்டும் மறு ஆய்வுக்கு அனுப்ப உத்தரவிட்டுள்ளது” மேலும் அதனை தொடர்ந்து ஏற்கனவே ‘படத்திற்கு உடனடியாக தணிக்கை சான்று வழங்க வேண்டும்’ என்று தனி நீதிபதி ஆஷா அளித்த தீர்ப்பை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த வழக்கை மீண்டும் தனி நீதிபதி விசாரித்து தீர்ப்பு வழங்குவார் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இந்த தீர்ப்பின் காரணமாக தொடர்ந்து ஜனநாயகன் படத்தின் வெளியீட்டில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது. ஏற்கனவே தனி நீதிபதி கொடுத்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்ட நிலையில் மீண்டும் தனிநீதிபதியிடமே இந்த வழக்கு விசாரணைக்கு சென்றுள்ளது படத்தின் வெளியீட்டில் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே தணிக்கை வாரியத்தின் தரப்பில் முன்வைக்கப்பட்ட “சட்டப்படியும், சினிமாட்டோகிராபி விதிப்படியும் 72 நிமிடங்களுக்கு மேல் படம் இருந்தால் அது குறித்து சென்சார் குழு தலைமை தான் முடிவெடுக்க வேண்டும். ஆனால் இதற்கு போதுமான கால அவகாசத்தை தனி நீதிபதி எங்களுக்கு கொடுக்கவில்லை” என்ற வாதத்தை கருத்தில் கொண்டு தணிக்கை வாரியத்திற்கு போதுமான அவகாசத்தை தனி நீதிபதி வழங்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com