பிடிஆர் ஓப்புதல் வாக்குமூலம்...அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும் - ஜெயகுமார் பேட்டி!

பிடிஆர் ஓப்புதல் வாக்குமூலம்...அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும் - ஜெயகுமார் பேட்டி!
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை ராயபுரம் பகுதியில் அதிமுக சார்பாக தண்ணீர் பந்தல் திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தண்ணீர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு பழங்கள், இளநீர் உள்ளிட்டவற்றை வழங்கினார். 

அதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியது போல் வெளியான ஆடியோ குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், 
”இரண்டே வருடத்தில் 30 ஆயிரம் கோடி சம்பாதித்து விட்டோம்” தமிழக நிதியமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.  எனவே, இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து நிதியமைச்சரை விசாரிக்க வேண்டும் எனவும்,  அதிமுகவும் இதில் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், பண்ருட்டி ராமச்சந்திரன் பல கட்சிகளுக்கு சென்று வந்துள்ளார். அவர் சென்ற கட்சிகள் அனைத்தும் உருப்படாமல் போய்விட்டது எனவும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சாடினார். மேலும், தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியாக இல்லை என்றும், காவல்துறை சுதந்திரமாக செயல்பட வில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com