நகைக்கடன் தள்ளுபடி.. விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு…  

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களின் தகவல்களை அனுப்புமாறு கூட்டுறவு நிறுவனங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
நகைக்கடன் தள்ளுபடி.. விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு…   
Published on
Updated on
1 min read

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களின் தகவல்களை அனுப்புமாறு கூட்டுறவு நிறுவனங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரையிலான நகையை அடமானம்  வைத்து கடன் பெற்ற பயனாளிகளின் விபரம் மற்றும் அவர்களின் நிலுவைத்தொகை விபரங்களை கூட்டுறவு வங்கிகள் தயார் நிலையில் வைத்திருக்கும் படி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, கூட்டுறவு நிறுவனங்களில் 5 சவரன் வரையிலான நகையை அடமானமாக வைத்து,  கடந்த மார்ச் மாதம் 31 -ம் தேதி வரையிலான கடன் பெற்ற பயனாளிகளின் ஆதார் மற்றும் குடும்ப அட்டை விபரம் மற்றும் அவர்களின் நிலுவைத்தொகை விபரங்களை கூட்டுறவு வங்கிகள் தயார் நிலையில் வைத்திருக்கும் படி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

மேலும், வங்கிகள் நகை கடன் தள்ளுபடி தொடர்பான விபரங்களை, குறிப்பிட்டுள்ள வழிகாட்டு முறைகளின் படி படிவங்களில் நிரப்பி மாற்றப்பட இயலாத குறுந்தகட்டில் பதிவு செய்து வரும் 16 -ம் தேதிக்குள் பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்ப வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கி கிளைகளின் தொகுப்பினை வங்கிகளின் மேலாண்மை இயக்குனர்கள் கையொப்பமிட்டு பதிவாளர் அலுவலகத்திற்கு அனுப்பிட வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com