"மீனவர்களை மாற்றான் தாய் பிள்ளை போல் பார்க்கிறார்கள்"- காளியம்மாள்

"நாடாளுமன்றம், சட்டமன்றத்தில் மீனவர்களை பற்றி பேச யாருமே இல்லை" - காளியம்மாள்
"மீனவர்களை மாற்றான் தாய் பிள்ளை போல் பார்க்கிறார்கள்"- காளியம்மாள்
Published on
Updated on
1 min read

தங்கச்சிமடம், ராமநாதபுரம்

ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடத்தில் இலங்கை சிறையில் உள்ள மீனவர்களையும் படகுகளையும் விடுதலை செய்ய வலியுறுத்தி நேற்று முன்தினம் உண்ணாவிரத போராட்டமும் நேற்று காத்திருப்பு போராட்டம் நடத்தி வந்த நிலையில் இன்று மூன்றாவது நாளாக கஞ்சி தொட்டி திறந்து நூதன போராட்டத்தில் மீனவர்கள் ஈடுபட்டனர்

இந்த நிலையில் மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகிய காளியம்மாள் தங்கச்சிமடத்துக்கு வருகை தந்து மீனவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார்.

இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீனவர்கள் கடத்தலில் ஈடுபடுகிறார்கள் என்று கூறியது கண்டனத்திற்குரியது அண்ணாமலை அவர்கள் இதனை திரும்ப பெற வேண்டும் என்றும் மேலும் மத்திய, மாநில அரசுகள் மீனவர்களை மாற்றான் தாய் பிள்ளை போல பார்ப்பதாகவும் தாயை இழந்த பிள்ளைகள் போல மீனவர்கள் இருக்கின்றனர் என்று தெரிவித்ததோடு அரசியலில் மீனவர்களுக்கென்று அங்கீகாரம் இல்லாததால் சட்டமன்றத்திலும், நாடாளுமன்றத்திலும் மீனவர் பற்றி பேசுவதற்கு யாருமே இல்லை என்று தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com