கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பத்மஜாவுக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக, தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரைக் கைது செய்ய போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், வழக்கில் தேவையான ஆதாரங்களைத் திரட்டி வருவதாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இந்த விவகாரத்தில் ஆட்சியருக்கு ஆதரவாக நடவடிக்கை எடுக்கக் கோரி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் டிஜிபி அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின் தமிழக வெற்றி கழக அரசின் மீது பல குற்றசாட்டுகளை வைத்துள்ளார்.
அதிக “கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷ் ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரம் தொடர்பாக, டிஜிபி மகேஷ்குமார் அகர்வாலைச் சந்தித்து புகார் மனு அளிக்க வந்தோம். ஆனால், டிஜிபி அலுவலகத்தில் அவர் இல்லை. அவர் எங்கே என்று கேட்டபோது, சிங்கப்பெண் படையின் பயிற்சிக்காகச் சென்றுள்ளதாகத் தெரிவித்தனர். எங்களுடைய கேள்வி, இந்த சிங்கப்பெண் படை எங்கே இருக்கிறது? அவர்களுக்கு என்ன பயிற்சி அளிக்கப்படுகிறது? அவர்களுடைய பணி என்ன? என்பதுதான். அனைவரும் மனசாட்சியைத் தொட்டுச் சொல்ல வேண்டும். யாராவது இந்த சிங்கப்பெண் படையைப் பார்த்திருக்கிறோமா?
குற்றச் செயல்களில் தவெக நிர்வாகிகளே ஈடுபடுகின்றனர். தவெக எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் குற்றங்களில் ஈடுபடுகின்றனர். ஒரு மாவட்ட ஆட்சியருக்கு ஆளுங்கட்சி எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்புவது இதுவே முதல் முறை. இதுபோன்ற சம்பவம் இந்திய வரலாற்றிலேயே நடந்தது கிடையாது. பாதிக்கப்பட்ட மாவட்ட ஆட்சியரை தவெக தொண்டர்கள், 'அப்யூசிவ் விர்ச்சுவல் வாரியர்ஸ்' எனக் கூறப்படும் குழுவினர் தரக்குறைவாகப் பேசுகின்றனர். குடித்துவிட்டு ஆட்சியரின் முகாம் அலுவலகத்திற்குச் சென்று தகராறு செய்த சம்பவம் எங்காவது நடந்திருக்கிறதா?
தவெக மே மாதம் ஆட்சிக்கு வந்த நிலையில், ஜூலை மாதத்தில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. ஆட்சிக்கு வந்து முதல் ஆறு மாதங்கள் ஹனிமூன் பீரியட் என நாம் சொன்னதை இந்த முதலைமைச்சரும், சட்டமன்ற உறுப்பினர்களும் அதே அர்த்தத்தில் எடுத்தோக்கொண்டார்கள். ஜூலை மாதமே ஆட்சியர் புகார் அளித்திருந்த நிலையில், அதை தலைமைச் செயலாளர் முதலமைச்சர் விஜய்யிடம் தெரிவித்தாரா? புகாரைத் தலைமைச் செயலாளர் மூடி மறைத்து பேரம் பேசியுள்ளார். எனவே, இந்த வழக்கில் தலைமைச் செயலாளர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஜூலையில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், 116 நாட்களாக முதலமைச்சர் விஜய் தூங்கிக்கொண்டிருந்தார்?
இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத அரசுக்கு எதிராகவும், முதலமைச்சருக்கு எதிராகவும் புகார் மனு அளித்துள்ளோம். மேலும், சிடிஆர் நிர்மல் குமார் இந்தச் சம்பவம் நடைபெறவில்லை எனக் கூறியுள்ளார். இந்த வழக்கில் அரசின் மீது துளியும் நம்பிக்கை இல்லை என்பதால், வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி புகார் அளித்துள்ளோம். புகார் மனு அளிக்க வந்தவரைத் தாக்கிய துணை சபாநாயகர் ரவிசங்கரையும் கைது செய்ய வேண்டும். கள்ளக்குறிச்சி தவெக எம்எல்ஏ அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்ய வேண்டும்” என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்