``வீதியில் கொட்டி எரிக்க வேண்டும்.. பெருமாள் முருகனுக்கு நன்றி.." - அறிவுலகம் ஊழல் விவகாரத்தில் 'கமல்ஹாசன்' தமிழக அரசுக்கு கோரிக்கை!

"இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள்." - கமல்ஹாசன்
Kamal Haasan urges Tamil Nadu govt over Periyar Arivalayam scam
அறிவுலகம் ஊழல் விவகாரத்தில் 'கமல்ஹாசன்' தமிழக அரசுக்கு கோரிக்கை!
Published on: 
Updated on: 
1 min read

கோவையில் சமீபத்தில் முதலமைச்சர் விஜய் திறந்து வைத்த பெரியார் அறிவுலகத்து புத்தகங்கள் வாங்குவதில் ஊழல் நடந்துள்ளதாக எழுத்தாளர் பெருமாள் முருகன் தனது கட்டுரையில் குற்றம்சாட்டியுள்ளார்.

இதனைக் குறிப்பிட்டுள்ள நடிகரும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், இதைவிட தமிழுக்கு பெரிய அவமானம் எதுவுமில்லை எனக் கூறியுள்ளார்.

அவரது பதிவில், "தமிழுக்கு இதைவிடப் பெரிய அவமானம் இல்லை.

இத்தகைய போலியான நூல்கள் நீண்ட கால அடிப்படையில் மாபெரும் தீங்குகளை விளைவிக்கும். இவற்றை வாசித்து, குறிப்பெடுத்து, அவை பேச்சிலும் எழுத்திலும் ஆய்விலும் இடம்பெற்றால் தமிழின் மானம் கப்பலேறிவிடும். இந்தக் காரியத்தை எவர் செய்திருந்தாலும் அவர்கள் தமிழுக்குத் துரோகம் இழைத்தவர்கள்.

இந்தப் போலி நூல்கள், அனைத்து நூலகங்களில் இருந்தும் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டு வீதியில் கொட்டி எரிக்கப்பட வேண்டும். மோசடி செய்த பதிப்பகங்கள் சீல் வைக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

இந்த மோசடியை அம்பலப்படுத்தியதற்காக எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு நாம் நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்." எனக் கூறியுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்