நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வழக்கிலிருந்து கபில் சிபல் விலகல் ...!

நெடுஞ்சாலைத்துறை டெண்டர் வழக்கிலிருந்து கபில் சிபல் விலகல் ...!
Published on
Updated on
1 min read

நெடுஞ்சாலைத்துறையின் டெண்டர் வழக்கில்  இருந்து  கபில் சிபல் விலகல்:- 

நெடுஞ்சாலை துறையில் ரூ.4800 கோடி முறைகேடு தொடர்பான எடப்பாடி பழனிசாமி மீதான மேல் முறையீட்டு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அதிமுக ஆட்சி காலத்தில் நெடுஞ்சாலைத்துறையில் டெண்டர் கோரியதில் ரூ.4,800 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதாக கூறி எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான புகாரில் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரிக்க கோரி திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி வழக்கு தொடர்ந்திருந்தார்.

2018-ம் ஆண்டு  ஆரம்ப கட்ட விசாரணை அறிக்கையில் குறை காண முடியாது எனவும் ஆட்சி மாற்றம் காரணமாக புதிதாக விசாரணை நடத்த தேவையில்லை எனவும் நீதிபதி தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த தீர்ப்புக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத்துறை உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தது. இதையடுத்து இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, எடப்பாடி பழனிச்சாமி தர்ப்பில் இந்த வழக்கின் குற்றசாட்டை முன்வைத்த திமுக அமைப்புச்செயலாளர் ஆர். எஸ். பாரதியின் சார்பில் ஆஜரான அதே வழக்கறிஞர் தர்போது விசாரணைக் குழுவிலும் வருவது சட்டப்படி ஏற்க முடியாது என அதிமுக சார்பில்  வாதிடப்பட்டது. 

நெடுஞ்சாலைத்துறையின் டெண்டர் வழக்கில் ஒரே வழக்கறிஞரே மனுதாரருக்கும்  விசாரணை அமைப்புக்கும் ஆஜராவது சட்ட நெறிமுறைகளுக்கு மாறானது என எழுந்த குற்றச்சாட்டை ஏற்று லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் ஆஜரான கபில் சிபல் வழக்கிலிருந்து விலகினார்.  

இதனையடுத்து, உச்சநீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை  வரும் 25-ம் தேதிக்கு தள்ளிவைத்தது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com