

காவிரி விவகாரத்தில் கர்நாடக மாநிலம் மாண்டியாவில் தமிழ்நாடு முதல்வர் விஜயின் போஸ்டர் கிழிக்கப்பட்டதால் பரபரப்பு. கர்நாடகாவில் ஜனநாயகன் திரைப்படம் ஓடும் தியேட்டர் முன்பு கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். கர்நாடகாவில் தமிழ்நாட்டுக்கு காவிரி தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து இந்த போராட்டம் நடைபெறுகிறது. இதில் தமிழக முதல்வர் விஜய் நடிப்பில் ஜூலை 23 தேதி வெளியன் 'ஜனநாயகன்' திரைப்படம் திரையிடப்படும் தியேட்டரின் முன்பு கன்னட அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஜனநாயகம் திரைப்பட போஸ்டரை கிழித்து போராட்டம் நடத்தினர்.
ஜூலை 28ம் தேதி காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் தமிழக அரசு சார்பில் காவிரி நீர் திறந்துவிட கோரி கோரிக்கை வைக்கப்பட்டது. “உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடகா தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரை மாதவாரியாக வழங்கவில்லை. இதனால் பாசனத்திற்காக மேட்டூர் அணை இன்னும் திறக்கப்படவில்லை. எனவே கர்நாடக அரசு தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நீரை உடனடியாக திறந்துவிட உத்தரவிட வேண்டும்” என கோரிக்கை விடுத்தது.
ஆனால் கர்நாடக அரசு, அணைகளில் 50% நீர் மட்டுமே இருப்பு இருப்பதாகவும், மாநில குடிநீர் தேவைக்கு மட்டுமே நீர் உள்ளதாகவும் தெரிவித்தது. மேலும் தமிழ்நாட்டிற்கு நீர் திறந்து விட இயலாது என்றும் மறுத்தது. இதை ஏற்றுக்கொள்ள மறுத்த காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு, தமிழகத்துக்கு அடுத்த 15 நாட்களுக்கு தினமும் 3500 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் எனவும் 29 தேதி காலை 8 மணிக்கு இரு மாநில எல்லையான பிலிகுண்டுலு அளவீட்டு நிலையத்தில் இருந்து தண்ணீர் திரைப்பட வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் மற்றும் நீர்ப் பாசனத்துறை அதிகாரிகளுடன் நேற்று அவசர ஆலோசனை மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த நீர்ப்பாசனத்துறை அமைச்சர் “குடிநீர் தட்டுப்பாட்டை தவிர்க்க, தமிழகத்திற்கு நீரை திறந்து விட முடியாது என்றும் காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுவின் உத்தரவை எதிர்த்து காவிரி மேலாண்மை ஆணையத்தில் மேல் முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்தார். இந்நிலையில் ஆகஸ்ட் 3ம் தேதி கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமாரை தமிழக முதலவர் விஜய் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் மேகதாது ஆணை மற்றும் காவிரி நீர் திறப்பு போன்ற கோரிக்கைகள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கன்னட அமைப்பினர், முதல்வர் விஜயின் பட போஸ்ட்டரை கிழித்து காவிரி தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.