மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் உருவம் பொறித்த நாணயத்தை மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட உள்ளார். கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை ஒட்டி, அவரது உருவம் பொறித்த 100 ரூபாய் நாணயத்தை வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த கோரிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்த நிலையில், கருணாநிதியின் உருவம் பதித்த 100 ரூபாய் நாயணம், வரும் 17-ம் தேதி, அதிகாரப்பூர்வமாக, சென்னையில் வெளியிடப்படவுள்ளது. இதில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று நாணயத்தை வெளியிடவுள்ளார். தமிழ்நாடு அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்படவுள்ள இந்நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.