“கரூர் கூட்ட நெரிசல் விளக்கம்” - சென்னை தலைமை செயலகத்தில் கரூர் கூட்ட நெரிசல் குறித்து அதிகாரிகள் வீடியோவுடன் விளக்கம்!

அங்கிருந்த வீடியோ ஆதாரங்களை வைத்து கேள்விகளுக்கு ..
“கரூர் கூட்ட நெரிசல் விளக்கம்” - சென்னை தலைமை செயலகத்தில் கரூர் கூட்ட நெரிசல் குறித்து  அதிகாரிகள் வீடியோவுடன் விளக்கம்!
Admin
Published on
Updated on
2 min read

சென்னை தலைமை செயலகத்தில் கரூர் கூட்ட நெரிசல் குறித்து விளக்கமளித்துள்ளனர். அங்கிருந்த வீடியோ ஆதாரங்களை வைத்து கேள்விகளுக்கு ஏடிஜிபி டேவிட்சன், குடும்ப நல செயலாளர் செந்தில் குமார், ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா ஆகியோர் விளக்கமளித்துள்ளனர். ஒவ்வொரு கேள்விகளையும் குறிப்பிட்டு அதற்கான விளக்கத்தையும் கூறியுள்ளனர்.  

சரியான இடம் கொடுக்கப்படவில்லை

முதலில் தமிழக வெற்றி கழகத்தினர் 10 இடங்களை தேர்வு செய்து இருந்தனர் பின்னர் போலீசாரிடம் ஆலோசனை மேற்கொண்டு லைட் ஹவுஸ் ரவுண்டன கேட்டிருந்தனர். அங்கு பெட்ரோல் பங் இருப்பதாலும் அசம்பாவிதங்கள் நடக்கும் என்பதாலும் அந்த இடம் கொடுக்கவில்லை. அடுத்து உழவர் சந்தையை கேட்டிருந்தனர் அங்கு ஐந்தாயிரம் பேர் மட்டுமே கூட முடியும் எனவே அந்த இடம் கொடுக்கலாம். கோட்டம் நடந்த வேலுச்சாமி புரம் இரண்டு பக்க சாலைகளும் நீண்டு வசதியாக இருந்ததால் அந்த இடம் வழங்கப்பட்டது. 

கூட்டத்தின் எண்ணிக்கையை கணிக்க முடியவில்லையா ?

தமிழக வெற்றி கழகத்தினர் கூட்டத்தில் பத்தாயிரம் பேர் கலந்துகொள்வார்கள் என அனுமதி கேட்டிருந்தனர் ஆனாலும் மற்ற மாவட்டங்கள் அதிக மக்கள் வந்ததால் இங்கும் அதிகம் வருவார்கள் என நினைத்து காவல் துறையினர் இருபதாயிரம் பேருக்கு ஏற்ற போலீஸ் பாதுகாப்பை அளித்திருந்தனர். ஆனால் ஏற்கனவே கூட்டம் நடைபெறுகின்ற இடத்தில் அதிகமான மக்கள் இருந்த நிலையில் விஜயின் வாகனத்திற்கு பின்னும் சில கூட்டம் வந்தது. 

பரப்புரையின் போது மின்சாரம் நிறுத்தப்பட்டது ஏன்? 

விஜய் பரப்புரை செய்யும் போது மின்வாரிய துறையினால் மின்சாரம் துண்டிக்கப்படவில்லை. தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் ஜெனரேட்டர் வைத்து அமைக்கப்பட்டிருந்த போகஸ் லைட்டுகள் மட்டுமே அங்கு நனைத்திருந்தது அது உங்களுக்கு அந்த காணொளியில் தெளிவாக தெரியும். அதற்கு காரணம் கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஜெனரேட்டர் வைத்திருந்த இடத்தில் மக்கள் கூட்டம் அலைமோதியதில் ஜெனரேட்டர் இணைப்பு தானாக துண்டிப்படைந்துள்ளது. 

காவலர்கள் தடியடி நடத்தினார்களா?

விஜயின் வாகனம் பேசக்கூடிய இடத்திற்கு நெருங்கி வந்த போது வாகனம் நிறுத்தப்பட வேண்டிய இடத்தில அதிக மக்கள் கூட்டம் இருந்தனர் மேலும் வாகனத்துடன் வந்த சிலரும் அங்கு நிற்க ஆரமித்த நிலையில் விஜய் பேச வழி ஏற்படுத்தி கொடுப்பதன் காரணமாக போலீசார் அங்கிருந்த மக்களை அப்புறப்படுத்தினார்கள். 

பரப்புரை தொடங்குவதற்கு முன்பே நெரிசல் சம்பவம் நடந்ததா? 

மக்கள் விஜய் 12 மணிக்கு வருகிறார் என்ற காரணத்தினால் அதற்கு முன்னதாகவே வர தொடங்கிவிட்டனர். சரியாக 3 மணியிலிருந்து அதிக மக்கள் கூட்டம் கூட தொடங்கியது, அவர்களுக்கு சோர்வான காரணத்தினாலும் தண்ணீர் இல்லாத சிலர் நின்றிருந்த இடங்களிலேயே அமர தொடங்கிவிட்டனர். சரியாக விஜயின் பிரச்சார வாகனம் வரும்போது அங்கிருந்த கூட்டம் அவரது வாகனத்திற்கு வழி விடுவதற்கு நடுவில் இருந்த கூட்டம் ஓரங்களில் சென்றதாலும் வாகனத்திற்கு பின்னால் இருந்த மக்கள் விஜய்யை பார்க்க வேண்டும் என்று முன் பக்கம் நோக்கி சென்றதால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. 

பரப்புரை கூட்டத்தின் போது ஆம்புலன்ஸ் எதற்கு வந்தது? 

பரப்புரை கூட்டத்திற்கு அருகில் 6 ஆம்புலன்ஸ்கள் மட்டுமே இருந்த கூட்டம் நடக்கும்  இடத்தில் இருந்து ஆம்புலன்ஸ் தேவை என 7.14 மணிக்கு போன் வந்தது எனவே அப்பகுதி 7.20 மணிக்கு ஆம்புலன்ஸ் சென்றது அடுத்து இரண்டாவது போன் 7.15 மணிக்கு வந்தது அந்த ஆம்புலன்ஸ் 7.23 மணிக்கு சென்றுள்ளது.  அதற்கு முன்பு கூட்டத்திற்குள் சென்றது அந்த கட்சியினர் ஏற்பாடு செய்த ஆம்புலன்ஸ்கள் தான் கூட்டம் நடைபெறும் என்பதால் தமிழக வெற்றி கழகத்தினர் சார்பாக அசம்பாவிதங்களை தவிர்க்க ஐந்து ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, பின்னர் கூட்ட நெரிசலில் சிக்கி பாதிக்கப்பட்டவர்களை மீட்க மொத்தம் 55 ஆம்புலன்ஸ்கள் பயன்படுத்தப்பட்டது. அதில் 33 ஆம்புலன்ஸ் தனியாரிடமிருந்து காவல் துறை அறிவுறுத்தலினால் செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இரவு ஏன் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது?         

கரூரில் மொத்தம் பாரன்சிக் மருத்துவர்கள் மூவர் இருந்தனர் மேலும் அருகில் இருந்த மாவட்டங்களில் இருந்து வரவழைக்கப்பட்டது மொத்தம் 16 பாரன்சிக் மருத்துவர்கள் இருந்த நிலையில் விரைவாக உடல்கள் பிரேத பரிசோதனை செய்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. பெரும்பாலும் இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறும் பொது உயரதிகாரிகளிடம் வரும் உத்தரவு விரைவாக செய்து கொடுக்க வேண்டும் என்பது தான். ஏற்கனவே உயிர்களை இழந்து வாடும் உறவினர்கள் பிரேத பரிசோதனை செய்ய அதிக நேரமாகும் போது அவர்களின் துயரம் இன்னும் அதிகமாகும் என்னும் நல்ல எண்ணத்தில் விரைவாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 

என அனைத்து கேள்விகளுக்கும் விளக்கமளித்துள்ளனர்.  மேலும் சில கேள்விகளை செய்தியாளர்கள் முன் வைத்த நிலையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து கொண்டிருக்கிறது அந்த விசாரணை முடிவில் முழு விவரம் தெரியவரும் என கூறியுள்ளனர்.   

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com