தமிழகத்தில் தென் மாவட்டங்களில் சாதி ரீதியான மோசமான வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. நாங்குநேரி முதற்கொண்டு பல அடுக்கடுக்கான கோர சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளன. இன்று மீண்டும் கவின் என்ற இளைஞர் ஆணவ படுகொலை செய்யப்பட்ட விவகாரம் மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி கேடிசி நகர் பகுதியில் கவின் செல்வ கணேஷ் என்ற ஐடி ஊழியர் கொடூரமாக வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் இத்துணை பதற்றத்திற்கு காரணம்.
பின்னணி!
பாளையங்கோட்டை கே.டி.சி நகரை சேர்ந்தவர் சரவணன் ராஜபாளையம் பட்டாலியனிலும், இவரது மனைவி மணி முத்தாறு பட்டாலியனிலும் வேலை பார்த்து வருகின்றனர். இவர்களது மகன் சுர்ஜித். இவர்தான் கவினை குத்தி கொலை செய்துள்ளார்.
கரணம் சுர்ஜித் அக்காவும், கவினும் பலகாலமாக காதலித்து வந்துள்ளனர். ஆனால் தனது அக்காவோடு பேசக்கூடாது என பலமுறை கவினை எச்சரித்துள்ளனர் பலர். ஆனாலும் அவர் கேட்காமல் சுர்ஜித் அக்கா வேலை செய்யும் சித்த மருத்துவமனைக்கு அடிக்கடி சென்றுவந்ததாக தெரிகிறது.
இந்நிலையில்கவின் தனது தாத்தாவை மருத்துவமனைக்கு அழைத்து செல்லும்போது சுர்ஜித் எச்சரித்துள்ளார் அப்போதும் கேட்காமல் அவர் பேசுவதை நிறுத்த முடியாது என்று சொல்லியிருக்கிறார். இந்த நிலையில்தான், அவரின் முகத்தில் மிளகாய் போடி போடு சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்” இந்நிலையில் அவர் மீது குண்டாஸ் உள்ளிட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் சுர்ஜித்தின் பெற்றோரை கைது செய்தால் மட்டுமே கவினின் உடலை வாங்குவோம் என அவரின் குடும்பத்தினர் போராட்டம் நடத்தி வருகின்றனர், இதனை தொடர்ந்து சுர்ஜித் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார், அவரின் தாயையும் கைது செய்ய வேண்டுமென கோரிக்கைகள் வலுகின்றன .
இந்நிலையில் கவினின் காதலி சுபாஷினி தனது பெற்றோருக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை எனக்கூறி வீடியோ வெளியிட்டுள்ளார். அதில், "நானும் கவினும் உண்மையாக காதலித்தோம். ஆனால் நாங்கள் செட்டில ஆக எங்களுக்கு நேரம் தேவைப்பட்டது. கடந்த மே 30 ஆம் தேதி கவினும் சுர்ஜித்தும் சந்தித்து பேசிக் கொண்டார்கள். எங்கள் காதலைப் பற்றி சுர்ஜித், அப்பாவிடம் சொல்லிவிட்டான். நீ காதலிக்கிறாயா? என்று அப்பா, என்னிடம் கேட்க நான் 'காதலிக்கவில்லை' என்று கூறிவிட்டேன். ஏனென்றால் கவின் என்னிடம் நேரம் கேட்டிருந்தான். 6 மாதம் கழித்து வீட்டில் கூற கவி சொல்லியிருந்தான். ஆனால் அடுத்த 2 மாதங்களில் இப்படி ஆகிவிட்டது. கவின், சுர்ஜித்துக்கு இடையே என்ன நடந்தது என்று தெரியவில்லை.பெண் பார்க்க வரச் சொல்லி கவினிடம் சுர்ஜித் கூறியிருப்பது மட்டுமே எனக்கு தெரியும். அன்று என்ன நடந்தது என்றால், கவினின் எனக்கு தெரியும். அன்று என்ன நடந்தது என்றால், கவினின் தாத்தாவுக்கு சிகிச்சை அளிக்க கவின், அவனுடைய அம்மா, மாமா வந்திருந்தார்கள்.
நான் சிகிச்சை பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது கவினின் அம்மா, மாமாவிடம் பேசிவிட்டு கவின் வெளியே சென்றுவிட்டான். அதன்பிறகே கவினைத் தேடினோம். போன் செய்து அவன் எடுக்கவில்லை. அதுக்கு அப்புறம்தான் இப்படி நடந்துவிட்டது.
தேவையில்லாமல் யாரும் இஷ்டத்திற்கு வதந்தியை கிளப்ப வேண்டாம். உங்களுக்கு தோன்றுவதை எல்லாம் பேசாதீர்கள். என் அப்பா, அம்மாவுக்கு இதில் எந்த சம்மந்தமும் கிடையாது” என வீடியோ வெளியிட்டுள்ளார், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.