'போதையில் தள்ளாடும் கோலிவுட்!' சிக்கப்போகும் மூன்றெழுத்து நடிகர்..!? ஸ்ரீகாந்த் வெறும் sample -தான்.. திமிங்கலமே வரப்போகுது..!

இரண்டு தினங்களுக்கு முன்னர். கொக்கைன் போதைப்பொருளை பயன்படுத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில்...
kollywood industry is on drugs
kollywood industry is on drugs
Published on
Updated on
2 min read

“பணம் பாதாளம் வரைக்கும் பாயும்”  என்பார்கள்  ஆனால் அதே  பணமே நம்மை பள்ளத்திலும்  தள்ளும். அதீத புகழ்  வெளிச்சம், பண  புழக்கம், கேளிக்கைகளுக்கு பெயர்போனதுதான் திரைத்துறையினரின் வாழ்க்கை. . எப்படியாவது கஷ்டப்பட்டு சினிமாவில் மிளிர்ந்து விட வேண்டும் என்ற எண்ணத்தின் பின்னணியில்  கலைத் தாகம்  இருந்தால் கூட காலப்போக்கில் புகழ் வெளிச்சத்தில் அது  மங்கி போய்விடுகிறது.

எங்களுக்கு ‘Privacy’ -யை இந்த சமூகமும் ஊடங்கங்களும் தருவதில்லை எனக்கூறி, தங்களின்  பிரைவசியான நேரத்தில் கேளிக்கைகளில் ஈடுபடுவது சினிமாக்காரர்களுக்கு இயல்பான ஒன்றுதான்.  அந்த கேளிக்கைளின் ஒரு நீட்சிதான் போதைப்பழக்கம்.  திரைத்துறையும் போதைப்பழக்கமும் இரண்டற கலந்த ஒன்றாகிவிட்டது. மத்திய மாநில அரசுகள் என்னதான்  தகிடுதத்தம் செய்தாலும் இதை குறைப்பதென்ன, கட்டுப்படுத்தக்கூட முடிவதில்லை.  நாம் ஆதர்ஷ நாயகர்களை பார்க்கும் பலரும் இதற்கு விதிவிலக்கல்ல. தங்களின் ஆடம்பர வாழ்வை பார்ட்டி வைப்பதன் மூலமே வெளிப்படுத்த முடியும் என நம்புகின்றனர், சிலரோ படம் சரியாக போகவில்லை, மன உளைச்சல் அதனால் தான் இது எங்களுக்கு தேவை என்கின்றனர் வேறு  சிலர். என்னதான் கண்ணாடி திரையிட்டு மறைத்தாலும் உண்மை என்ற புகை  வெளிச்சத்துக்கு வந்துதானே ஆகும்.

அப்படி வெளிச்சத்துக்கு வந்து மாட்டிக்கொண்டவர் தான் நடிகர் ஸ்ரீகாந்த்.  இரண்டு தினங்களுக்கு முன்னர். கொக்கைன் போதைப்பொருளை பயன்படுத்தியதற்காக அவர் கைது செய்யப்பட்டு தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவருக்கு போதை வஸ்துக்களை வாங்கிக்கொடுத்த பிரசாந்த் என்ற நபர் சாதாரண ஆள் இல்லை அவருக்கு ஆப்ரிக்கா வரைக்கும் லிங்க் உண்டும். உயர்ரக ஆப்ரிக்க போதை வஸ்துக்களை இதுபோன்று “Depression” -ல் இருக்கும் நடிகர் நடிகைகளுக்கு விநியோகித்து வருகிறார்.

போதை விவகாரம் மட்டும் புற்று ஈசல் போல.. ஒன்றை கிளம்பிவிட்டாள் பின்னாலே கொத்து கொத்தாக ஆட்கள் சிக்குவார்கள், அந்த வரிசையில் தன் நேற்று நடிகர் கிருஷ்ணாவும் சிக்கினார். ஆனால் அவரோடு மட்டும் முடியுற கதை இல்லை இது..

அந்த போதை பொருள் விநியோகிஸ்தர் பல திடுக்கிடும் வாக்குமூலங்களை கொடுத்துள்ளதாக தெரிகிறது… அதில் நாம் யாரும் சற்றும் எதிர்பாராத ஒருத்தர் சிக்கியிருக்கிறார். நடுத்தர வயது கொண்ட 3 எழுத்து நடிகர் ஒருவரின் பெயரும் இந்த வழக்கில் அடிபட்டு உள்ளதாக தெரிகிறது. எமோஷனல் நடிகரான இவர் சமீபத்தில் வெற்றி தோல்வி இரண்டும் கலந்த படங்களை கொடுத்து வருகிறார். பெருமளவில் பெண்கள் வழக்கில் சிக்காத இவரை போன்று தான் கணவன் அமைய வேண்டும் என இன்ஸ்ட்டா தோழிகள் பலரும் ஸ்டேட்டஸ் வைத்து திரிய.. இவருக்கு இப்படி ஒரு வீக்னஸ் இருந்திருக்கிறது போல. .இவர் மற்றவர்களை போல கஞ்சா, மெத்தப்பட்டமைன் எல்லாம் வேண்டாம் என்பாராம்.. “அடித்தால் கொக்கைன், ஸ்டாம்ப் (LSD)  தாங்க” என்று வெறும் ‘Hard Drugs” -யே தேடி வருகிறாராம். இவர் திரைத்துறைக்கு வந்தபோதெல்லாம் இந்த சவகாசம் இவருக்கு இல்லை போல.. நாளடைவில் அந்த “நட்சத்திர குடும்ப கும்பல்” -உடன் இவர் நெருங்கி பழக்க தொடங்கியிருக்கிறார், அவர்கள் தந்த ஆதரவும், வரவேற்பும் தான் “இதெல்லாம் செய்தால்தான் ஊருக்குள் நாமும் பெரிய ஆள் போல “ என்ற நினைப்பில் இவ்வாறு செய்து சிக்கிக்கொண்டார் என்று சொல்லப்படுகிறது. எது எப்படியோ ஒரு வேளை இந்த மூன்றெழுத்து நடிகர் ஆதாரபூர்வமாக சிக்கினால் பாலிவுட்டில் சஞ்சய் தத் போல் கோலிவுட்டிலும் ஒரு பெரிய “திமிங்கலம்” ஒன்று சிக்க வாய்ப்பிருக்கிறது என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com