
தமிழகத்தில் வருகிற 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகிக்கொண்டிருக்கிறது விஜய்யின் தவெக-கட்சி. தமிழ்நாடு முழவதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் பூத் கமிட்டியை பலப்படுத்த அக்கட்சி முனைப்பு காட்டி வருகிறது.
இதற்காக தமிழ் நாடு முழுக்க 70,000 உறுப்பினர்களுடன் 35,000 பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த பணிகள் நிறைவடைந்த பின்பு கமிட்டியை பலப்படுத்த மாநாடு நடத்த திட்டமிடப்பட்டது. இந்த பூத் கமிட்டி மாநாட்டை மொத்தமாக அல்லாமல் தனித்தனியாக நடத்த திட்டமிட்டனர். இதில் முதல் கட்டமாக கொங்கு மண்டலத்தில் வாக்காளர் முகவர் மாநாடு இன்று நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பேசிய, ஆதவ் அர்ஜுனா, "மாநாட்டிற்கு வந்த மக்கள் கூட்டமைப்பே எங்கள் கட்சியின் பலத்தை உறுதிப்படுத்தி விட்டார்கள்.100 வருட கட்சியாக த.வெ.க அடியெடுத்து வைக்கும் முதல் நாள் இன்று. ஆம் நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம் த.வெ.க வில் உள்ள அனைவரும் 30 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் தான். அன்று இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் போராடிய அனைவரும் 30 வயது கீழ் இருந்தவர்கள் தான் அவர்கள் புரட்சி ஏற்படுத்தவில்லையா?.அதே போல் நாங்களும் ஒரு புரட்சி செய்வோம்.
எங்கள் தலைவர் அழைத்தால் கட்டுக்கடங்காத இளைஞர் கூட்டம் வரும். தமிழக வெற்றி கழகம் இன்னும் 12 மாதங்களில் தமிழகத்தில் பெரும் புரட்சி செய்ய போகிறோம்.
அண்ணா எப்போதும் சொல்வது போல “விமர்சிப்பவர்கள் விமர்சித்து கொண்டேதான் இருப்பார்கள்” எல்லா விமர்சனகளையும் தாண்டி எப்படி வெற்றி பெறுவது என்ற, வழிகாட்டுதல்களை எங்கள் தலைவர் எங்களுக்கு கற்றுக் கொடுத்துள்ளார்.
தமிழ் நாட்டில் உள்ள ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் கடந்த ஆண்டு எந்த கட்சிகள் எவ்வளவு ஓட்டு பெற்றது. தேர்தலின் போது எப்படி உழைக்க வேண்டும். என்ற தகவல்கள் படிவமாக்கப்பட்டு அந்தந்த வாக்குச்சாவடி முகவர்களின் கைபேசிக்கு அனுப்பப்படும் என்றும், இன்றிலிருந்தே உழைக்க ஆரம்பித்து விடுங்கள்" என கூறியிருக்கிறார் ஆதவ்.
இதனை தொடர்ந்து பேசிய கட்சியின் தலைவர் விஜய், "இது ஓட்டுக்காக நடக்கும் கூட்டம் அல்ல. நாங்கள் ஆட்சிக்கு வரவேண்டு என்று நினைப்பதே மக்களுக்காகத்தான். தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் அனைவரின் மனதிலும் உண்மை, நேர்மை, அர்ப்பணிப்பு இருக்கிறது. நம்மிடம் வேறு என்ன இல்லை? நாம் அனைவரும் போர் வீரர்கள். மக்களை ஏமாற்றி இனி யாராலும் ஆட்சியை பிடிக்க முடியாது"என பேசி உரையை முடித்தார்.
இதன் மூலம் தமிழக வெற்றி கழகம், தேர்தலுக்கு தீவிரமாக தயாராகி வருகிறது என தெரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் வருகின்ற 2026 தேர்தலில் த.வெ.க கட்சி ஆட்சி மாறுதலை ஏற்படுத்துமா இல்லை, ஓட்டை கலைப்பதோடு நின்றுவிடுமா?என்பதற்கு காலம் தான் முடிவு சொல்லும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்