
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அடுத்த சவுட்டஹள்ளி அருகே உள்ள சவுலுகொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சரவணன் இவரது மனைவி செல்வி. மகன்கள் ஹரிகாந்த் மற்றும் ஸ்ரீகாந்த். இவர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.சரவணன் சில வருடங்களுக்கு முன்பு உயிரிழந்த நிலையில் அவர் உயிருடன் இருந்த போதே இவர்களின் நிலத்தின் அருகே இருந்த ஒரு பகுதியை அதே பகுதியை சேர்ந்த ராஜகோபால் என்பவருக்கு விற்பனை செய்துள்ளார். இவர்களுக்குள் ஏற்கனவே நிலம் சம்பந்தமான பிரச்சினை இருந்து வந்துள்ளது. ஆனாலும் முடிவு எட்டப்படவில்லை.
இந்த நிலையில் கடந்த (ஆக 06) ஆம் தேதி சவுளுக்கொட்டாய் பகுதிக்கு 30 க்கும் மேற்ப்பட்டோருடன் வந்த ராஜகோபாலின் மகன் மைக்கேல்ராஜ், அங்கு போடப்பட்டிருந்த அஸ்திவாரத்தை கடப்பாரை மூலம் அகற்ற முயன்றார். அப்போது வாக்குவாதம் ஏற்பட்டு, செல்வியின் மகன்களான ஹரிகாந்த் மற்றும் ஸ்ரீகாந்த் ஆகியோர், பைக் பம்பரை வைத்து மைக்கேல்ராஜை சரமாரியாக தாக்கினர். இந்த தாக்குதலில் கீழே சரிந்த மைக்கேல்ராஜை விடாமல் தாக்கியதில் படுகாயம் அடைந்தார். இதனை பார்த்த அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துக்கல்லூரி மருத்துவனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
அங்கு அவருக்கு தலையில் 8 தையல்கள் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதே போல் செல்வியும் தன்னை தாக்கியதாக அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சவுலுகொட்டாய் பகுதியில் ராஜகோபால் என்பவர் சரவணன் உயிருடன் இருக்கும் போது அவருடைய 15 சென்ட் நிலத்தில் 10 செண்ட் நிலம் வாங்கியுள்ளார். 5 செண்ட் நிலத்தை தன் மகன் ஸ்ரீகாந்துக்கும் கொடுத்துள்ளார். அந்த ஐந்து சென்ட் நிலத்தில் செல்வி மற்றும் அவரது மகன் ஸ்ரீகாந்த் ஆகியோர் அஸ்திவாரம் போட்டு வீடு கட்டும்போது இந்த ஐந்து செண்டும் தனக்கு தான் சொந்தம் என்று அடாவடித்தனமாக அஸ்திவாரத்தை ராஜகோபாலும் மைக்கேல் ராஜும் உடைத்துள்ளனர்.
அப்போதுதான் இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டு தாக்கிக் கொண்டுள்ளனர். இது குறித்து தற்போது வரை காவல்துறை சார்பில் வழக்கு ஏதும் பதியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கிருஷ்ணகிரி அருகே நிலத்தகராறில் ஏற்பட்ட பிரச்சனையில் இருதரப்பினர் கடப்பாரை மற்றும் இரும்பு ராடால் மாறி மாறி தாக்கிக்கொள்ளும் வீடியோவானது தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வைரலாகி வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.