ஆபாச வீடியோ விவகாரத்தில் சிக்கி பதவி இழந்த கே.டி ராகவன்..! பாஜக -வில் மீண்டும் பொறுப்பு!! தொண்டர்கள் கடும் அதிருப்தி!!

“சமூக ஊடகத்தில் வெளியான கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.டி ராகவன் சம்பந்தப்பட்ட வீடியோ..
kt ragavan
kt ragavan
Published on
Updated on
1 min read

தமிழக பா.ஜ.க -வில் கிடு கிடுவென வளர்ந்து மாநில பொதுச் செயலாளராக மாறி, மிக முக்கிய அங்கமாக இருந்து வந்த கே.டி ராகவன் தொடர்பாக கடந்த 2021 ஆம் ஆண்டு  சமூக வலைதளங்களில் ஆபாச  வீடியோ ஒன்று வெளியானது. இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.

ஆப்பு வாய்த்த அண்ணாமலை!

கே.டி ராகவனுக்கு ஆப்பு வைத்தது அண்ணாமலை தான் என்பது ஊரறிந்த உண்மை. கே.டி ராகவனின் ஆசாபாச செய்கையை அம்பலப்படுத்திய யு டியூபரான மதன், தனது வீடியோவில் பேசும்போது இந்த விவகாரம் குறித்து மாநிலத் தலைவர் கே. அண்ணாமலைக்கு தெரியும் என்றும் அவரது ஒப்புதலுடனேயே அந்த வீடியோ வெளியிடப்படுவதாகவும் கூறியிருந்தார்.

அதை உறுதிப்படுத்தும் விதமாக 2021 ஆம் ஆண்டில்பாஜக மாநிலத்தலைவராக இருந்த  அண்ணாமலை அவர் அளித்த பேட்டி ஒன்றில் “சமூக  ஊடகத்தில் வெளியான கட்சியின் மாநில பொதுச் செயலாளர் கே.டி ராகவன் சம்பந்தப்பட்ட வீடியோ குறித்த செய்திகளை அறிந்தேன். இந்த வீடியோவை வெளியிட்ட யூ-டியூபர் மதன் ரவிச்சந்திரன் என்னை சந்தித்து பேசியது உண்மை.

முதல் முறையாக என்னை கட்சி அலுவலகத்தில் அவர் சந்தித்துப் பேசியபோது, கட்சியின் பொறுப்பில் இருப்பவர்கள் பற்றிய வீடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் உடனடியாக அவர்கள் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். ஒருவர் மீது சுமத்தப்படும் குற்றங்களால் மட்டும் அவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டு விடக்கூடாது. அதன் உண்மை தன்மையை ஆராய வேண்டும். குற்றச்சாட்டில் உண்மை இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தேன்” இவ்வாறு பேசியிருந்தார்.

இந்த நிலையில்பாரதிய ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் பட்டியல் நேற்று மதியம் வெளியான நிலையில் துணைத்தலைவராக குஷ்பூ சுந்தர் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோன்று சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சசிகலா புஷ்பா உள்ளிட்டோருக்கு புதிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளது. இதில் பா.ஜ.க.வை சேர்ந்த கேடி.ராகவன் தமிழ்நாடு பாஜக மாநில பிரிவு அமைப்பாளராக பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜகவை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கடும் எதிர்ப்பை பதிவு செய்துள்ளனர். சமூக வலைதளங்களில் கண்டனம் தெரிவிக்கும் பாஜகவினர் இது தவறான முன் உதாரணம் என தெரிவித்தும், கட்சியில் இருந்து விலகுவதாகவும் தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே விஜயதாரணி, சரத்குமார் உள்ளிட்டவருக்கு பதவிகள் வழங்கப்படாதது ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கக்கூடிய நிலையில் கே‌.டி.ராகவனுக்கு மீண்டும் பதவி வழங்கப்பட்டுள்ளது பாஜக தொண்டர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com