
இளங்கோவடிகளை போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
கண்ணகியின் காப்பியமான சிலப்பதிகாரத்தை எழுதிய உலக புகழ் பெற்ற புலவர் இளங்கோவடிகளை போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திங்கள் 11-ஆம் நாள் மாலை அணிவித்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டு வரப்படுகிறது.
அதன் அடிப்படையில் இன்று இளங்கோவடிகளின் நினைவை போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் மாநகராட்சி மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், தமிழ்நாடு அரசு தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரிகள் ஆகியோர் சென்னை அண்ணா சதுக்கத்தில் உள்ள இளங்கோவடிகளின் திருவுவச்சிலைக்கு கீழே வைக்கப்பட்டுள்ள உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இதையும் படிக்க: இனி இங்கும் அனுமதி பெற்று மது அருந்தலாம்...!!!