16 ஆண்டுகளுக்குப் பிறகு...நாளை நடைபெறவுள்ள முக்கிய நிகழ்வு...ஆராவாரம் கொண்ட பக்தர்கள்...!

16 ஆண்டுகளுக்குப் பிறகு...நாளை நடைபெறவுள்ள முக்கிய நிகழ்வு...ஆராவாரம் கொண்ட பக்தர்கள்...!
Published on
Updated on
1 min read

பழனி முருகன் கோயில் மலை அடிவாரம், படிபாதை கோயில்களில் இன்று நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

16 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் கும்பாபிஷேகம் :

பழனியில் தண்டாயுதபாணி கோயில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை விமர்சையாக கொண்டாடப்படவுள்ளது. அதன்படி, இன்றைய தினம் கிரிவீதியில் உள்ள ஐந்து மயில்கள் மற்றும் பாத விநாயகர், சண்டிகாதேவி, இடும்பன், முதலான பத்திற்கும் மேற்பட்ட உபதெய்வ சன்னதிகளில்  திருக்குட நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது. 

முன்னதாக மலைமீது அமைக்கப்பட்டுள்ள 90 யாகசாலைகளில் சிவாச்சார்யார்கள் வேள்வி வளர்த்து சிறப்பு பூஜை செய்தனர். தொடர்ந்து கங்கை, காவிரி, உள்ளிட்ட புனித நதிகளில் இருந்து கொண்டுவரப்பட்ட புனித நீர் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. பின்னர் நடைபெற்ற மகா தீபாரதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

இந்த நிலையில் நாளை கும்பாபிஷேம் நடைபெறவுள்ளதால், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். மேலும், கிரி வீதி, பேருந்து உள்ளிட்ட 16 இடங்களில் எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு கும்பாபிஷேகம் ஒளிபரப்பு செய்யப்படவுள்ளது. இதில், தமிழக அமைச்சர்கள் சேகர்பாபு, ஐ.பெரியசாமி,  சக்கரபாணி உள்ளிட்ட பலரும், கலந்துகொள்ளவுள்ளனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com