தமிழகத்தையே உலுக்கிய கொலை..! தாயின் கையாலே கொல்லப்பட்ட சிசுக்கள்..!! குன்றத்தூர் அபிராமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை..!

மீனாட்சி சுந்தரத்துடன் கேரளாவில் சென்று வாழ்க்கை நடத்த முடிவு செய்த அபிராமி தனது இரண்டு ...
kundrathur abhirami
kundrathur abhirami
Published on
Updated on
1 min read

கடந்த 2018 -ஆம் ஆண்டு ஒரு கள்ளகாதலுக்காக 2 பிள்ளைகளை கொலை சம்பவம் நாடியே உலுக்கியது.  பகுதியைச் சேர்ந்த அபிராமிக்கு கார்ணிகா (2) அஜய் (4)  என்ற இரண்டு குழந்தைகள் இருந்தன. இந்நிலையில் அபிராமிக்கு பிரியாணி கடையில் வேலை பார்த்த மீனாட்சி சுந்தரம் என்பவர் உடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. 

மீனாட்சி சுந்தரத்துடன் கேரளாவில் சென்று வாழ்க்கை நடத்த முடிவு செய்த அபிராமி தனது இரண்டு குழந்தைகள் மற்றும் கணவருக்கு விஷம் கொடுத்து கொலை செய்து விட்டு தப்பிச்செல்ல முயன்றார்.அதற்காக குழந்தைகளுக்கு பாலில் விஷம் கொடுத்து கொலை செய்துள்ளார். கணவர் இதிலிருந்து தப்பிவிடவே அவர் 2018 -ஆம் ஆண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.

2018 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்த சம்பவம் தமிழ்நாடு எங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது இது தொடர்பான வழக்கு கடந்த எட்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது .

ஆஜர்படுத்துவதில் குளறுபடி!

கள்ளக்காதலுனுக்காக இரண்டு குழந்தை கொலைசெய்த  வழக்கில் இன்று குன்றத்தூர் பகுதியை சேர்ந்த அபிராமிக்கு காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்க உள்ள நிலையில் 11 மணி வரை குற்றவாளி அபிராமியை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தாததால் குன்றத்தூர் ஆய்வாளர்  மீது நீதிபதி செம்மல் கடுமையாக சாடினர், 

ஆய்வாளர் மீது 174,175,176 ஆகிய  3 பிரிவின் கீழ் கடமையை செய்யாதது, கடமையை மீறுதல் உள்ளிட்ட  பிரிவுகளின் கீழ் உங்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் ஆய்வாளர் குழந்தைக்கு உடல் நலம் சரியில்லை எனை தெரிவித்தார் இதனை அடுத்து நீதிபதி இது போன்ற காரணங்களை இனி தெரிவிக்க கூடாது முதலும் கடைசியுமாக இருக்கட்டும் என்று எச்சரித்தார்.

இந்தநிலையில் காஞ்சிபுரம் மகிளா நீதிமன்றம் அபிராமியை குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. கொலைக்கு உடந்தையாக இருந்த மீனாட்சி சுந்தரமும் குற்றவாளி என தீர்ப்பு வெளியாகியுள்ளது. மேலும் இவர்களுக்கு சாகும் வரை மரண தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com