சிறப்பாக நடைபெற்ற குருத்தோலை பவனி...!!!

சிறப்பாக நடைபெற்ற குருத்தோலை பவனி...!!!
Published on
Updated on
1 min read

குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு சென்னை சாந்தோம் தேவாலயத்தில் நடைபெற்ற பவணியில் 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ  பொதுமக்கள் பங்கேற்றனர்.

உலகம் முழுவதிலும் உள்ள கிறிஸ்தவ பொதுமக்களால் இன்றைய தினம் குருத்தோலை ஞாயிறு ஆக  கடைபிடிக்கப்படுகிறது.  2000 ஆண்டுகளுக்கு முன்பு எருசலேம் நகரத்திற்கு இயேசு கிறிஸ்து சென்றபோது அவரை வரவேற்கும் விதமாக ஒலிவ இலைகளை கையில் ஏந்தி மக்கள் வரவேற்றனர்.

அதை நினைவு கூறும் வகையில் வருடம் தோறும் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்படுகிறது.  இதனால் சென்னை சாந்தோமில் உள்ள புனித தோமையார் தேவாலயம் அருகில் உள்ள ரபேல் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட கிறிஸ்தவ பொதுமக்கள் காலை ஒன்றாக கூடி கூட்டு பிரார்த்தனை மேற்கொண்டனர்.

அதன்பின்னர் புனிதம் செய்யப்பட்ட குருத்தோலைகளை தங்கள் கையில் ஏந்தியபடி ஓசன்னா இயேசு கிறிஸ்து வாழ்க என்று உச்சரித்தபடியே தெருக்களின் வழியாக பவனியாக சென்றனர்.  இந்த பவனியானது இறுதியாக சாந்தோம் தேவாலயத்தை சென்று அடைந்த பின் கூட்டு பாடல் திருப்பலி நடைபெற்றது.  இந்த பவனி மற்றும் திருப்பலியில் அருட்தந்தைகள் அருட்சகோதரிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com