சட்ட ஒழுங்கு;  2 நாட்கள் முதலமைச்சர் நேரில் ஆய்வு!

Published on
Updated on
1 min read

சட்டம் ஒழுங்கு நிலவரம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் நாளை மற்றும் நாளை மறுநாள் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆய்வு செய்யவுள்ளார். 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் நிலவும் சட்டம்- ஒழுங்கு பிரச்சனையை ஆய்வு செய்யவும், வளர்ச்சி திட்டப் பணிகளின் செயல்பாடுகளை அறிந்து கொள்ளவும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் பல்வேறு மாவட்டங்களில் ஆய்வுக்கூட்டம் நடத்திய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இப்போது சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நிலவும் சட்டம், ஒழுங்கு பிரச்சனை குறித்து 2 நாட்கள் ஆய்வு மேற்கொள்ள உள்ளார். 

இதற்கான ஆய்வுக் கூட்டம் மறைமலைநகரில் உள்ள மாநில ஊரக பயிற்சி நிலையத்தில் நாளையும், நாளை மறுநாளும் நடைபெற உள்ளது. இரண்டு நாள் நடைபெறும் ஆய்வு கூட்டத்தில் முதல் நாளான நாளை ஆவடி மற்றும் தாம்பரம் காவல் துறை ஆணையர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுடனும், இரண்டாம் நாளான 18 தேதி அன்று 4 மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுடன் சட்டம்-ஒழுங்கு பிரச்சனை குறித்து முதலமைச்சர் முக ஸ்டாலின் விவாதிக்கப்பட உள்ளார்.

இந்த ஆய்வில் சென்னை மாநகராட்சி தவிர்த்து சென்னை செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர்கள் காவல்துறை அதிகாரிகள் மற்றும் பல்வேறு தரப்பினர் கலந்து கொள்கின்றனர். இதனிடையே தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் சிறப்பு வளர்ச்சி திட்டங்கள், நலத்திட்டங்கள் ஆகியவற்றில் கடந்த இரண்டு ஆண்டு கால முன்னேற்றங்கள், திட்டங்களின் நிலை குறித்த விரிவான அறிக்கையை தயாராக வைத்திருக்கும் படி தமிழ்நாடு அரசு ஏற்கனவே சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. 

ஏற்கனவே, முன்று முறை இந்த கள ஆய்வு ஒத்திவைக்கப்பட்ட நிலையில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஆய்வு நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com