"திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது....." - புதுச்சேரி அதிமுக விமர்சனம்.

"திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது....."  -    புதுச்சேரி அதிமுக விமர்சனம்.
Published on
Updated on
1 min read

கள்ளசாராயம் கடத்தலை தடுக்காமல், புதுச்சேரியில் இருந்து சாராயம் கடத்தி வருவதாக கூறி பிரச்சனையை ஸ்டாலின் திசை திருப்ப முயல்வதாக புதுச்சேரி அதிமுக குற்றம்சாட்டியுள்ளது.

புதுச்சேரி அதிமுக தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன் பேசுகையில், 

திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளதாகவும், செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாரயம் குடித்த 10-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாய் சுட்டிக்காட்டி இதற்கு பொறுப்பேற்று ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் எனவும் கூறினார்.  

மேலும், கள்ளச்சாராயம் கடத்தலை தடுக்க தவறிவிட்டு இந்த சாராயம் புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்டதாக கூறி இப்பிரச்சனையை ஸ்டாலின் திசை திருப்புகிறார் என்றும், புதுச்சேரியில் இருந்து எரிசாராயம் கடத்துவதாக எழுந்த  குற்றச்சாட்டுக்கு புதுச்சேரி கலால்துறையினர் விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவித்த அன்பழகன்,

தமிழக போலீசார் நினைத்தால் புதுச்சேரியில் சாராயம் கடத்துவதை தடுக்க முடியும். மேலும் போலி மதுபானம், தயாரிப்பவர்கள் கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்வது மட்டுமின்றி அவர்களின் சொத்துக்களையும் போலீசார் பறிமுதம் செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com