சட்டம் ஒழுங்கு:  மு.க. ஸ்டாலின் தொண்டர்களை குண்டர்களாக உருவாக்குகிறாரா? - பாஜக கேள்வி

சட்டம் ஒழுங்கு: மு.க. ஸ்டாலின் தொண்டர்களை குண்டர்களாக உருவாக்குகிறாரா? - பாஜக கேள்வி

Published on

திண்டுக்கல்லில்  பாஜக கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் கிழக்கு மாவட்ட தலைவர் தனபாலன் தலைமையில் நடைபெற்றது. இதில் தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அதன்பின்னர்  செய்தியாளர்களிடம் பேசுகையில்,  தமிழகத்தின்னுடைய  சட்டம் ஒழுங்கை  கையில் வைத்திருக்கும் திமுக தலைவரும், தமிழகத்தின் முதல்வர் மு க ஸ்டாலின் தனது தொண்டர்களை குண்டர்களாக மாற்றி வருகிறா என்று கேள்வி எழுப்பினார்.

 திண்டுக்கல் மாநகராட்சியில் நடைபெறும் ஊழல்களை, பிஜேபி மாமன்ற உறுப்பினர் தனபால் வெள்ளையறிக்கை கேட்டதை தொடர்ந்து, அமைச்சர் ஐ பெரியசாமி வழிகாட்டுதல்படி, தனபால் வீட்டிற்கு சென்று உயிர்க்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தி உள்ளனர்.  பொது மேடையிலேயே திமுகவினர் கொலை மிரட்டல் விடுக்கின்றனர். அவர்கள்  மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தனபால் உயிருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மற்றும் தமிழக முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்க வேண்டும். பாஜக மாவட்டத் தலைவர் தனபாலுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும். குஜராத் கலவரத்தில் முஸ்லீம்களை கொல்லப்பட்டது போல் சித்தரித்து வீடியோக்களை ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம் வெளியிட்டது.  மத கலவரத்தை தூண்டும் விதமாக ஒளிபரப்பிய தொலைக்காட்சி நிறுவனத்தை தடை செய்துள்ளது. மதக் கலவரங்களை ஏற்படுத்தும் நோக்கில் வீடியோக்கள் வெளியிடுபவரை காவல் துறை உடனடியாக கைது செய்ய வேண்டும்.  ஈரோடு இடைத்தேர்தலில் அதிமுகவை தான் பாஜக ஆதரிக்கின்றது.  வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் மாவட்ட அளவில் அடிப்படை கட்டமைப்புகளை செய்து வருகின்றோம்.  திமுக அமைச்சர்களின் ஊழல் பட்டியலை வரும் ஏப்ரல் மாதம் அண்ணாமலை வெளியிட உள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com