வழக்கறிஞர் முருகானந்தம் கொலை வழக்கு: உடலை பெற்றுக்கொள்ள தாயாருக்கு அறிவுறுத்தல்!!

இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி முருகானந்தத்தின் தாயார் சுமித்ரா தேவி...
muruganandham death
muruganandham death
Published on
Updated on
1 min read

வழக்கறிஞர் முருகானந்தம் கொலை வழக்கை ஐ.ஜி. விசாரித்து மூன்று மாதங்களில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஈரோடு மாவட்டம், தாராபுரத்தில் மாற்றுத் திறனாளி வழக்கறிஞர்  முருகானந்தம், சொத்து தகராறில் ஜூலை 28 ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். 

இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி முருகானந்தத்தின் தாயார் சுமித்ரா தேவி, சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில், தாராபுரம் போலீசுக்கு எதிராக மனித உரிமை ஆணையம், உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களில் முருகானந்தம் வழக்குகளை நடத்தியதால், அவர் கொலை செய்யப்பட்ட வழக்கை, உள்ளூர் போலீசார் முறையாக விசாரிக்க மாட்டார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

 இந்த மனுவை விசாரித்த நீதிபதி வேல்முருகன்,  முருகானந்தம் கொலை வழக்கை   போலீஸ் ஐஜி விசாரித்து,   3 மாதங்களில்  குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், முருகானந்தத்தின் உடலை அவரது தாயார் பெற்றுக் கொள்ள மறுப்பதாக நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து, முருகானந்தத்தின் உடலை பெற்றுக் கொள்ளும்படி, அவரது தாயாருக்கு அறிவுறுத்தும்படி, அவர் தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com