ஹிந்தி புரியவில்லை; பிரதமர் மோடி காணொளி காட்சி நிகழ்ச்சியை புறக்கணித்து வெளிநடப்பு செய்த அதிகாரிகள்!

ஹிந்தி மொழியில் பேசியது புரியவில்லை என கூறி பிரதமர் மோடி காணொளி காட்சி நிகழ்ச்சியை விழுப்புரம் மாவட்ட ஊராட்சி மன்ற குழு உறுப்பினர்கள் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
ஹிந்தி புரியவில்லை; பிரதமர் மோடி காணொளி காட்சி நிகழ்ச்சியை புறக்கணித்து வெளிநடப்பு செய்த அதிகாரிகள்!
Published on
Updated on
1 min read

ஊரக வளர்ச்சித்துறை சார்பில் நலிவுற்றோர் நலன் குறித்த கருத்தரங்கு கூட்டம், நலத்திட்ட பணிகளுடன் பிரதமர் மோடியின் கலந்துரையாடல், விவசாயிகளுக்கு 21 ஆயிரம் கோடி ரூபாய் நிதியை மின்னணு முறையில் வழங்கும் நிகழ்ச்சி காணொலி காட்சி மூலம் நடைபெற்றது.

விழுப்புரம் ஊரக வளர்ச்சித் துறை அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மோகன் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து இந்தியில் நடைபெற்ற இந்த காணொலி நிகழ்ச்சிக்கான தமிழாக்கம் வழங்கப்படாததால் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள், ஊராட்சி மன்ற குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் வெளிநடப்பு செய்தனர். இதனால் ஊரக வளர்ச்சித் துறை அலுவலகம் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com