கர்நாடகவில்  5 வாக்குறுதிகள் - அமைச்சரவை ஒப்புதல்!!!

கர்நாடகவில் 5 வாக்குறுதிகள் - அமைச்சரவை ஒப்புதல்!!!

Published on

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப் பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியை கைப்பற்றிய நிலையில், இன்று சித்தராமையா முதலமைச்சராகவும், டி.கே.சிவக்குமார் துணை முதலமைச்சராகவும் பதவியேற்றுக்கொண்டனர்.

இந்த விழாவில், ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன் கார்கே, பிரியங்கா காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விசிக கட்சி தலைவர் திருமாவளவன், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், தேசிய மாநாட்டுக்கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, பீகார் முதல்வர் நிதீஷ் குமார், ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் டி.ராஜா, சிவசேனா எம்பி அனில் தேசாய், திமுக எம்பி டி.ஆர்.பாலு, புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

பதவியேற்பு விழா முடிவடைந்த பிறகு பேசிய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சி 5 முக்கிய வாக்குறுதிகளை கொடுத்து ஆட்சிக்கு வந்தது என்றும், காங்கிரஸ் எப்போதும் பொய்யான வாக்குறுதிகளை கொடுக்காது எனவும் தெரிவித்தார். மேலும் இன்னும் 1-2 மணி நேரங்களில் கர்நாடகா அமைச்சரவை கூடி, 5 முக்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற சட்டம் இயற்றப்படும் என தெரிவித்தார்.

5 முக்கிய வாக்குறுதிகள் 

1. குடும்பத்தலைவிகளுக்கு அதிகாரம் வழங்கவும், அவர்களின் வாழ்க்கையை அவர்களே முடிவெடுக்கவும் மாதம் ரூ.2,000 வழங்கப்படும்.

2. 18- 25 வயதுகுட்பட்ட வேலையில்லா பட்டதாரி இளைஞர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ரூ. 3000 வழங்கப்படும். டிப்ளமோ படித்த வேலையில்லா இளைஞர்களுக்கு ரூ.1500 வழங்கப்படும்.

3. வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களில் உள்ள ஒவ்வொருவருக்கும் மாதம் 10 கிலோ அரிசி வழங்கப்படும்

4. ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மாதம் 200 யூனிட் மின்சாரம் இலவசம்.

5. அனைத்து மகளிருக்கும் பேருந்தில் இலவச பயணம்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com