சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டியின் கேள்வியும் அமைச்சர் தங்கம் தென்னரசின் பதிலும்......

சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டியின் கேள்வியும் அமைச்சர் தங்கம் தென்னரசின் பதிலும்......
Published on
Updated on
1 min read

எத்தர் மின் வாகன தொழிற்சாலையை செய்யாறு தொழிற்பேட்டையில் அமைக்க தொழிற்சாலை இசைவு தெரிவிக்கும் பட்சத்தில் ஆய்வு மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார் 

பிச்சாண்டியின் கேள்வி:

சட்டப்பேரவையில் வினாக்கள் விடைகள் நேரத்தில், எத்தர் என்கிற மின்சார வாகன தொழிற்சாலை 1500 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைய உள்ளதாகவும், அதை செய்யாறு தொழிற்பேட்டையில் இடம் ஒதுக்கீடு செய்யும் பட்சத்தில் அங்கு அந்த தொழிற்சாலை அமைக்கப்படும் என அரசு அறிவித்த நிலையில் அதற்கு அரசு முன்வருமா என சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி கேள்வி எழுப்பியிருந்தார்.

தங்கம் தென்னர்சு பதில்:

இதற்கு பதிலளித்த தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மின்வாகன தொழில் உற்பத்தியில் இந்தியாவில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருவதாகவும், எத்தர் தொழிற்சாலையை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என தொழில் நிறுவனங்கள் முன்வருவதாகவும், 1500 ஏக்கர் நிலப்பரப்பளவில் தொழிற்சாலை அமைக்கப்பட உள்ள நிலையில், தொழிற்சாலை இசைவு தெரிவிக்கும் பட்சத்தில் செய்யாறு தொழிற்பேட்டையில் தொழிற்சாலையை அமைக்க அரசு ஆய்வு மேற்கொள்ளும் எனவும் பதிலளித்துள்ளார்.

-நப்பசலையார்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com