மசோதாவில் உள்ள சில பிரிவுகளில் மீனவர்கள் மீது குற்றச்சாட்டு சுமத்துதல், சிறையில் அடைத்தல், மீனவர்களுக்கு அபராதம் விதிப்பது போன்ற உட்பிரிவுகள் பரவலான எதிர்ப்பையும் அமைதியின்மையயையும் ஏற்படுத்தி உள்ளதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ள மு.க. ஸ்டாலின், எனவே இந்த சட்ட மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என்றும் அனைத்து தரப்பு மக்களின் கருத்துக்களை கேட்டறிந்து அதற்கேற்ப புதிய மசோதாவை பின்னர் தாக்கல் செய்யலாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.