புதுக்கோட்டையில் தீண்டாமைக்கு உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளை கௌரவிக்க பிரதமர், இந்திய குடியரசு தலைவர், முதலமைச்சருக்கு SC , ST சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடிதம்.

புதுக்கோட்டை வேங்கை வயல் கிராமத்தில் தீண்டாமை ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் கண்காணிப்பாளரை கௌரவிக்க வேண்டும்
புதுக்கோட்டையில்   தீண்டாமைக்கு உடனடி நடவடிக்கை எடுத்த அதிகாரிகளை கௌரவிக்க பிரதமர், இந்திய குடியரசு தலைவர்,  முதலமைச்சருக்கு  SC , ST சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடிதம்.
Published on
Updated on
1 min read

இந்திய குடியரசு தலைவர், பிரதமர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சருக்கு அகில இந்திய எஸ்சி எஸ்டி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடிதம்.

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவையில் கிராமத்தில் தீண்டாமை செயல்கள் நடைபெற்று வருவதாக இருந்த குற்றச்சாட்டின் பேரில் நேரடியாக கிராமத்திற்கு சென்று பட்டியலை இன மக்களை கோயிலுக்குள் அழைத்துச் சென்றது, அன்புள்ள தேநீர் கடையில் இரட்டை குவளை முறை இருப்பதாக இழந்த குற்றச்சாட்டுக்கு தீர்வு கண்டது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் தீண்டாமை செயல்களில் ஈடுபட்டவர்கள் கைது செய்தது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுத்த புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு மற்றும் காவல் கண்காணிப்பாளர் வந்ததா பாண்டி ஆகியோருக்கு புதிய கௌரவம் அளிக்கப்பட வேண்டும் என்று அந்த கோரிக்கை கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அவ்வாறு அவர்கள் கௌரவிக்கப்படும் பட்சத்தில் அனைத்து மாவட்டத்தில் உள்ள காவல் கண்காணிப்பாளர்கள் மாவட்ட ஆட்சியர்கள் நடவடிக்கை எடுத்தால் சாதி தீண்டாமை இல்லாத கிராமங்கள் அடங்கிய நாடாக இந்தியா மாறும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com