
வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு எடப்பாடி பழனிச்சாமி “மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம்” சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இன்று தேன்கனிக்கோட்டையில் பழைய பஸ் நிலையம் அருகில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி மக்களை சந்தித்து பேசி வருகிறார்,
“நான் பஸ் எடுத்து கொண்டு புறப்பட்டதால், மு.க.ஸ்டாலின் அதிர்ச்சியடைந்துள்ளார். தேன்கனிக்கோட்டையில் கூடியுள்ள மக்கள் கூட்டத்தை பார்த்தால், அவர் மீண்டும் மருத்துவமனைக்கு சென்றாலும், சென்று விடுவார். அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி பலம் வாய்ந்த கூட்டணி என்பதற்கு மக்களே சாட்சி.
தி.மு.க. கூட்டணி கட்சிகளை நம்பி உள்ளது. அ.தி.மு.க.- பா.ஜனதா கூட்டணி மக்களை நம்பி உள்ளது. 2026-&ல் சட்டசபை தேர்தலில் தி.மு.க. 200 இடங்களில் வெல்லும் என மு.க.ஸ்டாலின் பொய் பேசுகிறார். ஆனால், அ.தி.மு.க.-& பா.ஜனதா கூட்டணி 210 இடங்களில் வெற்றி பெறும். மத்திய அரசுடன் இணக்கமாக இருந்து அ.தி.மு.க. அற்புதமான ஆட்சி செய்து, தமிழகம் ஏற்றம் பெற்றது. எடப்பாடி பழனிசாமி மதவாத கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளார் என மு.க. ஸ்டாலின் கூறுகிறார்.
1999&-ம் ஆண்டு பா.ஜனதாவுடன் கூட்டணி வைத்து தி.மு.க. வெற்றி பெற்றது. பா.ஜனதா கூட்டணியில் தி.மு.க.விற்கு ஆட்சி, அதிகாரத்தில் இடம் கொடுத்தால் அது நல்ல கட்சி. அ.தி.மு.க. கூட்டணி வைத்தால் அவதூறாக பேசுவது நியாயமா. ஊழல் நிறைந்த தி.மு.க. ஆட்சியை அகற்றவேண்டும் என்கிற ஒத்த கருத்துடன் அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமைந்துள்ளது. தி.மு.க., அதன் கூட்டணி கட்சிகள் பயத்தின் காரணமாக வேண்டுமென்றே, திட்டமிட்டு அவதூறு பரப்பி வருகின்றனர். ஒசூர் தொகுதி சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விட்டது என்பதற்கு கூடிய கூட்டமே சான்று. போகிற இடமெல்லாம் அதிமுக ஆட்சிக்கு வராது என ஸ்டாலின் பேசுகிறார், அதிமுக ஆட்சிக்கு வரும் என்பது தான் மக்கள் கூட்டம் காட்டுகிறது புள்ளி விவரங்களை பேசி ஸ்டாலின் பொய் கூறுகிறார்.. பொருளாதார வளர்ச்சியை காட்டுகிறார்.. அதிமுக ஆட்சியில் இந்தியா பொருளாதாரத்தை விட தமிழகத்தின் பொருளாதாரம் அதிகமாக இருந்தபோதும் விளம்பரப்படுத்திக்கொள்ளவில்லை. திமுக சிறப்பாக செயல்பட்டிருந்தால் தமிழ்நாடு 2022,23 ஆண்டுகளில் பொருளாதாரம் குறைந்தது ஏன்??? இன்று, மின்சார கட்டணம் உயர காரணம் அதிமுக ஆட்சி தான் என திமுக அமைச்சர் பச்சை பொய் சொல்கிறார்.. 2017 ல் உதய் திட்டத்தில் கையெழுத்திட இரண்டு கோரிக்கைகளை முன்வைத்து கையெழுத்திட்டோம்.. அதற்கு பிறகு அதிமுக ஆட்சியின் 4 ஆண்டுகளில் உயர்த்தவில்லை, அதிமுக மீது தொழில்துறை அமைச்சர் பொய் புகார் கூறுகிறார்.
மின்கட்டணத்தை உயர்த்தி விட்டு அதிமுக மீது பழிபோடுவதை மக்கள் சிந்திக்க வேண்டும். அத்திக்கடவு அவினாசி திட்டத்தை நிறைவேற்றினோம், பல திட்டங்களை செய்துக்காட்டியதாலே கொங்கு பகுதியில் பிரச்சாரம் தொடங்கினோம். தைரியம், தெம்பு, திராணி இருந்தால் திமுக ஆட்சியின் சாதனை கூறுங்கள் என்னை அழைத்து எங்கு பேசினாலும் நான் பேச தயார்.. என்னுடைய சவாலை ஏற்று பேச வர வேண்டியது தானே பலமுறை அழைத்து விட்டோம். கிருஷ்ணகிரி மாவட்டத்தை தனி மாவட்டமாக அறிவித்து அதிமுக அரசு, மெடிக்கல் காலேஜ் கட்டி முடித்தோம் ஒசூர் மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்டது அதிமுக ஆட்சிக்காலத்தில், ஸ்டாலின் இதுப்போன்று செய்துள்ளார்.. அவர் முதல்வராகி அவரது அப்பா பெயரை வைக்க துடிக்கிறார்.. நூலகம் கட்டி பெயர் வைப்பது, பேருந்து நிலையத்திற்கு பெயர் வைப்பது.. நாம் பெற்ற பிள்ளைக்கு அவர் பெயர் வைக்கிறார்
நாங்கள் கேட்பதற்கு பதிலளிக்காமல் கூட்டணி கட்சியை வைத்து எம்ஜிஆர் குறித்து பேசுவதா? தெய்வமாக விளங்கியவர் அவருக்கு கட்சியினர் தான் வாரிசு... திமுக அரசு குடும்ப அரசியல், வாரிசு அரசியல். நீங்கள் வந்த பாதை, உங்கப்பா முதல்வர், தலைவர் அவர் வாய்ப்பு கொடுத்து எம்எல்ஏ, முதல்வராகினீர். ஆனால் நாங்கள் வந்தபாதை கிளை, ஒன்றியம், மாவட்டம எம்எல்ஏ, அமைச்சர், முதல்வர் என மக்கள் ஏற்று தான் உயர்ந்தோம். இன்று நான் யார் தெரியுமா கருணாநிதி மகன் என்கிறார்.. இவருக்கு அப்படி சொன்னால் தான் ஸ்டாலின் யாரென்றே மக்களுக்கு தெரிகிறது. எந்த உழைப்பும் கொடுக்காமல், அப்பா மூலம் உயர்ந்த உங்களுக்கே இப்படி என்றால் உழைத்து மேலே வந்த எங்களுக்கு எவ்வளவு தெம்பு திராணி இருக்கும். சொந்த கட்சியினரையே கட்டுப்படுத்த முடியாதவர் ஸ்டாலின்
2026 தேர்தலில் அதிமுக நிச்சயம் ஆட்சிக்கு வரும்.உதயநிதி உழைப்பு என்ன? குரங்கு குட்டியை தாங்குவது போல ஸ்டாலின் மகனை தாங்கி செல்கிறார்
இன்று உறுதிமொழி எடுத்துள்ளார் அது போதை பொருட்கள் ஒழிப்பு உறுதிமொழியாம்.. பலமுறை போதை பொருட்கள் புழகத்தை தடுக்க பேசி வருகிறேன்.. இப்போது தான் துணை முதல்வர் உறுதிமொழி ஏற்கிறார் பலரும் கஞ்சா போதையால் சீரழிந்த பிறகு இப்போதுதான் கூறுகிறார்கள் - அறிக்கை, ஊடகம் மூலம் பலமுறை எச்சரித்து வருகிறோம்... இப்போதுதான் அறிக்கை விடுகிறார்கள்” என அவர் பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.