பிரதமரை விமர்சித்த மனோ...அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த அண்ணாமலை!

பிரதமரை விமர்சித்த மனோ...அமைச்சருக்கு கண்டனம் தெரிவித்த அண்ணாமலை!
Published on
Updated on
1 min read

திமுகவின் சித்தாந்தத்தை போலவே அமைச்சர் மனோ தங்கராஜின் சிந்தனையும் வளைந்திருப்பதாக அண்ணாமலை ட்விட்டரில் சாடியுள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழா நேற்றைய தினம் கோலாகலமாக நடைபெற்றது. அந்நிகழ்வின் போது செங்கோல் மற்றும் அதனை வழங்கிய தமிழ்நாட்டு ஆதினங்களிடம் பிரதமர் மோடி ஆசி பெற்றார். பிரதமரின் இந்த செயல் சமூக வலைதளங்களில் மிகப்பெரிய அளவில் விவாதத்திற்குள்ளானது. 

இதற்கிடையில் தமிழ்நாட்டு ஆதினங்களிடம் பிரதமர் மோடி ஆசி பெற்ற புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்த பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், பிரதமரை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் அமைச்சர் மனோ தங்கராஜின் அந்த ட்வீட்டுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்வீட் செய்துள்ளார். அந்த பதிவில், அவதூறும், துஷ்பிரயோகமுமே திராவிட அரசியலின் அடிநாதமாக இருப்பதாகவும், திமுகவின் சித்தாந்தைப் போலவே அமைச்சரின் சிந்தனையும் வளைந்திருப்பதாகவும் விமர்சனம் செய்துள்ளார்.

மேலும், அமைச்சர் மனோ தங்கராஜ் பிரதமர் குறித்து தான் பதிவிட்டிருந்த ட்வீட்டை தனது ட்விட்டர் பக்கத்தில் இருந்து அழித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com