வருகிற 2026 சட்டமன்ற தேர்தல் நாம் இதுவரை பார்க்காத தனித்துவமான தேர்தலாக அமையும் என்பதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. இந்த தேர்தலை தனித்துவமாக்கியதில் முக்கிய பங்கு விஜய்க்கு உண்டு. அவர் திமுக மட்டுமின்றி அதன் கூட்டணி கட்சிகளுக்கும் மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமைந்துள்ளார்.
விஜய் கட்சி துவங்கிய நாளிலிருந்தே அவருக்கான ஆதரவும், ரசிகர் கூட்டமும் பெருகி வழியத்துவங்கியது. விஜய் சில முக்கியமான இடங்களில் அரசியல்வாதியாக கோட்டை விட்டாரா? என்றால், ஆம் உண்மைதான். அதற்கு காரணம் அவர்கள் புதியவர்கள் அரசியலுக்கு பழக்கமில்லாதவர்கள், மேலும் அரசியல்மயப்படாத தொண்டர்களை வைத்திருப்பவர்கள். ‘தவறி ஒரு முறை செய்தால் தான் அது தவறு.. மீண்டும் மீண்டும் செய்தால்..” அதை என்ன சொல்வதென்று தெரியவில்லை.
ஆனால் அவரின் அரசியல் பிரவேசத்தால் 41 -உயிர்கள் பலியானது என்ற உண்மையை இனி யாராலும் மாற்ற முடியாது. ஆனாலும் மக்கள் விஜய் மீது அதிகளவிலான வெறுப்புணர்வை உமிழவில்லை என்றுதான் தோன்றுகிறது. மேலும் இன்னமும் விஜயை பின்தொடரும் இளைஞர்கள் இருக்கின்றனர். அதுவே அவரின் மிகப்பெரும் பலம்.
திமுக ஆட்சிக்காலத்தில் நிறைய பெரும் தவறுகளை செய்துள்ளது. ஆட்சி அமைத்ததிலிருந்து, ஊழல், தலித் மக்கள் மீதான வன்கொடுமைகள், காவல் மரணங்கள், பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்து உள்ளது. அதிலும் குறிப்பாக திமுக -வின் இமேஜை வெகுவாக உடைத்த ஒரு நிகழ்வு என்றால் அது ‘தூய்மை பணியாளர் போராட்டம் தான்” சென்னை திமுக -வின் கோட்டை என்று அறியப்படும் பகுதியாகும்.ஆனால் இந்த சம்பவத்திற்கு பிறகு மக்கள் திமுக மீதான தங்கள் வெறுப்பை வாக்குகளில் காட்டுவார்கள் என்று சொல்லப்படுகிறது.
அடுத்ததாக அதிமுக -பாஜக கூட்டணி ஒருவேளை அதிமுக - தவெக கூட்டணி அமைத்திருந்தால் நிச்சயம் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கும் என்கின்றனர் அரசியல் ஆர்வலர் சிலர். ஆனால் அது எடப்பாடியின் முடிவு மட்டுமல்ல அமித்ஷா -வின் முடிவும் கூடத்தான் அதிமுக - பாஜக -வின் பிடியில் உள்ளது என்ற கருத்தும் நிலவுகிறது.
இப்படி ஒரு தனித்துவமான தேர்தல் களத்தை தமிழ்நாடு இதற்கு முன்பு கண்டுள்ளதா என தெரியவில்லை.
இந்த சமகால அரசியல் குறித்து தனியார் நாளேடுக்கு திராவிட இயக்க பேச்சாளரான நாஞ்சில் சம்பத் பிரத்தேயக பேட்டி ஒன்றை அளித்துள்ளார், அதில் 2026 தமிழக அரசியல் சூழல் குறித்து பல விஷயங்களை பகிர்ந்துள்ளார்.
அவர் அளித்துள்ள அந்த பேட்டியில் “தமிழக அரசியல் களம் தாண்டி தேசிய அளவிலும் திமுக -வின் தேவை அதிகரிக்க துவங்கியுள்ளது. காங்கிரசுடன் நட்பாக உள்ள திமுக பாஜக எதிர்ப்பு என்ற ஒற்றை புள்ளியில் தான் களம் காணும். அவர்களின் கூட்டணியும் அப்படியான ஒன்றுதான். அவர்கள் கூட்டணி அமைந்தவிதம் சிறப்பான ஒன்று. சலசப்புகள் இருந்தாலும் திமுக கூட்டணி உடையாது, எனவே தமிழகத்தில் மும்முனை போட்டி அமையத்தான் அதிக வாய்ப்புகள் உண்டு.
அப்படி அமைந்தால் திமுகவிற்கு எதிரான முதல் போட்டியாளராக விஜய்தான் இருப்பார். லட்சக்கணக்கான ரசிகர்களுடன் அவர் ஒரு புதிய சக்தியாக அவதாரம் எடுத்திருக்கிறார். ஆனால் அந்த இடம்தான் திமுக -விற்கு பின்னடைவான இடம். இளைஞர்களை ஈர்ப்பதற்காக பிரச்சாரத்தை நடத்தினால் மட்டுமே திமுக வெல்லும்.
நாம் தமிழர் கட்சி விஜய் பிரவேசத்திற்கு பிறகு வலுவிழந்துவிட்டது. அதை சீமானின் பேச்சிலிருந்தே நாம் உணரலாம். இந்த தேர்தல் முடியும் போது 1% வாக்கு கிடைத்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
ஆனால் தமிழகத்தின் அரசியல் எதிர்காலம் விஜய் vs உதய் என மாற அதிக வாய்ப்புகள் உண்டு” என அவர் பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.