தஞ்சை மாவட்டம் சோழபுரம், மேலாண்மேடு வள்ளலார் தெருவை சேர்ந்தவர் கனகசபை மகன் சுரேஷ் (37). அவரது மனைவி சுபத்ரா (36). மகள் அனுஷ் கீர்த்தி (4) ஆகியோர் காரில் மயிலாடுதுறையில் நடந்த அவரது உறவினர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு கல்லணை, பூம்புகார் சாலை வழியாக சோழபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது திருவிடைமருதூர் அருகே உள்ள கல்யாணபுரத்தில் எதிரே வந்த லோடு ஆட்டோ நேருக்கு நேர் மோதியது. இதில் லோடு ஆட்டோவில் வந்த ஐந்துக்கும் மேற்பட்டோரும், காரில் வந்த சுரேஷ் அவரது மனைவி மகள் உள்ளிட்ட மூன்று பேரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை அப்பகுதி மக்கள் மீட்டு, ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் கல்லணை பூம்புகார் சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த திருவிடைமருதூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.