தேவைப்பட்டால் ஊரடங்கு நீட்டிக்கப்படும்.! -முதல்வர் ஸ்டாலின் பேச்சு.! 

தேவைப்பட்டால் ஊரடங்கு நீட்டிக்கப்படும்.! -முதல்வர் ஸ்டாலின் பேச்சு.! 
Published on
Updated on
1 min read

இந்த முழு ஊரடங்கால் தோற்று குறைந்திருப்பது ஓரளவிற்கு திருப்தி அடைந்துள்ளது ஆனால் முழு திருப்தி அடையவில்லை தமிழகத்துக்கு தேவைப்பட்டால் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் ஒரகடம் தனியார் கம்பெனி ஊழியர்களுக்கு தடுப்பூசி முகாமை துவக்கி வைத்து ஊழியர்களுக்கு தடுப்பூசி செலுத்துவதை நேரில் சென்று பார்வையிட்டார். அதனைத்தொடர்ந்து ஸ்ரீபெரும்புதூர் தொகுதி மாம்பாக்கத்தில் உள்ள ஆக்ஸிஜன் ஆலையை ஆய்வு மேற்கொண்டார். இறுதியாக, திருவள்ளூர் மாவட்டம் நியமம் வட்டார ஆரம்ப சுகாதார நிலையத்தில் உள்ள சிகிச்சை பிரிவு மற்றும் தடுப்பு மையத்தை ஆய்வு செய்தார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கொரோனா தொற்றை வெல்ல வேண்டும் என்றால் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் அதற்கான விழிப்புணர்வை தமிழக அரசு செய்து வருகிறது என்றும் கூறிய அவர். நோய் பரவக்கூடிய சங்கிலியை உடைக்க வேண்டும் என்றும் கூறினார்.

மேலும் தற்போது போடப்பட்டுள்ள ஊரடங்கால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் படிப்படியாக தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளது என்றும், இன்னும் இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குள் ஊரடங்கு முழு பலனைத் தரும் என்ற நம்பிக்கை வந்துள்ளது மக்கள் அனைவரும் முழு ஊரடங்கு கட்டுப்பாட்டை கடைபிடித்து வீட்டிலேயே இருக்க வேண்டும் அவசியம் இல்லாமல் வெளியே வரக்கூடாது என்று விரும்பி வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன் என்றார். 

தொடர்ந்து பேசிய அவர், இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு ஒரு நாளைக்கு 78 ஆயிரம் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது 3என்றும், இந்த அரசு பொறுப்பேற்றதற்கு முன்னதாக 6 விழுக்காடு தடுப்பூசிகள் வீன் அடைய செய்தது, அதை ஒரு விழுக்காடாக குறைந்துள்ளதாக கூறினார். மேலும், அதிமுக அரசு இருந்த வரையிலும் 1.15 லட்சம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வந்தது ஆனால் தற்போது 1.64 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறோம் என்றும், கூடுதலாக 50,000 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறினார். 

மேலும், தமிழகத்தில் தடுப்பூசியை தயாரிப்பது போன்ற நடவடிக்கை மேற்கொள்ள இருக்கிறோம் என்ற அவர் முதல் அலையை முற்றிலுமாக தடுத்து முற்றுப்புள்ளி வைக்காதது தான் இரண்டாம் அலை ஏற்படுவதற்கு காரணமாக உள்ளது என்று கூறிய அவர் இந்த இரண்டாம் அலைக்கு முற்றுப்புள்ளி வைத்து கொரோனாவை வெற்றி காண்போம் என்ற நம்பிக்கை உள்ளது எனக் கூறிய அவர் இந்த முழு ஊரடங்கால் தொற்று குறைந்திருப்பது ஓரளவிற்கு திருப்தி அடைந்துள்ளது என்றும், தமிழகத்துக்கு தேவைப்பட்டால் முழு ஊரடங்கு நீட்டிக்கப்படும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com