அதிகாலை 5:35.. "பறவை மோதி சேதமடைந்த விமானம்" - 2 மணி நேரம் நடந்த சோதனை! வாக்குவாதத்தில் ஈடுபட்ட 268 பயணிகள்

சுமார் 500 அடி உயரத்தில் தரையிறங்க இருந்த நிலையில் பறவை ஒன்று விமானத்தில் மோதி
London flight cancelled
Published on
Updated on
1 min read

சென்னையில் இருந்து லண்டன் செல்லவிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் பறவை மோதி சேதம் அடைந்ததால் ரத்து செய்யப்பட்டுள்ளது.  இந்த விமானம் விமானம் தினமும் அதிகாலை 3.30 மணிக்கு, லண்டனில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்துவிட்டு, அதே விமானம் அதிகாலை 5.35 க்கு லண்டன் செல்லும். வழக்கம் போல் இன்று காலை 224 பயணிகள், 12 விமான ஊழியர்கள் என மொத்தம் 236 பேருடன் சென்னை விமான நிலையம் வந்து கொண்டிருந்தது. சுமார் 500 அடி உயரத்தில் தரையிறங்க இருந்த நிலையில் பறவை ஒன்று விமானத்தில் மோதி, என்ஜின் பகுதியில் சிக்கிக் கொண்டுள்ளது.

இதை அறிந்த விமானி சாமர்த்தியமாக விமானத்தை எப்போதும் தரையிறங்கும் இடத்தில் தரையிறக்கி உள்ளார். அதையடுத்து விமான பொறியாளர்கள் குழுவினர் மற்றும் பாதுகாப்பு ஊழியர்கள் சுமார் 2 மணி நேரம் சோதனை செய்துள்ளனர். மேலும் தற்போது விமானத்தை இயக்குவது கடினம் என்றும், தற்போது இயக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளனர். அதைத்தொடந்து அதற்கான பராமரிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனால் அதிகாலை 5:35 க்கு லண்டன் செல்லவிருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ரத்து செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் 2 மணி நேரம் காத்திருந்த பயணிகள் விமான நிலைய அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அட்டையடுத்து பயணிகள் சென்னையில் உள்ள ஹோட்டலில் தங்க வைத்து , விமானம் முழுமையான பரிசோதனை நடந்து பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னரே இயக்கப்படும் என தெரிவித்துள்ளனர். இதனால் 268 பயணிகளும் சிரமத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com