வைகோ தொடர்பான திரைப்படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் தொண்டர்கள் ஆத்திரம்!

வைகோ தொடர்பான திரைப்படத்திற்கு டிக்கெட் கிடைக்காததால் தொண்டர்கள் ஆத்திரம்!
Published on: 
Updated on: 
1 min read

மாமனிதன் வைகோ என்ற ஆவணபடத்திற்கு டிக்கெட் கிடைக்காததால், தொண்டர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தேனியில் உள்ள திரையரங்கம் ஒன்றில் மதிமுக சார்பில் வைகோ குறித்த "மாமனிதன் வைகோ" என்ற ஆவணபடம் திரையிடப்பட்டது. இதற்காக தேனி சென்ற மதிமுக தலைமை நிலைய செயலாளரும், வைகோவின் மகனுமான துரை வைகோவிற்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

இந்த ஆவணப்படத்தை பார்க்க மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மதிமுக தொண்டர்கள் வந்திருந்த நிலையில், சிலருக்கு டிக்கெட் கிடைக்காததால், நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com