முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.
Published on
Updated on
1 min read

உள்ளாட்சி தேர்தல் தகராறு உள்ளிட்ட இரு வழக்குகளில் தமிழக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு முன்ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கடந்த அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த கரூரை சேர்ந்த எம் ஆர் விஜயபாஸ்கர், ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் நடந்த போது ஏற்பட்ட தேர்தல் தகராறில் கொலை மிரட்டல் விடுப்பு முறையில் பேசியது பொது சொத்துக்களை சேதப்படுத்தியது போன்ற பிரிவுகளில் கரூர் மாவட்டம் தாந்தோணி மலை காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதேபோல கரூரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட விஜயபாஸ்கர், பொதுமக்களுக்கு இடையூறாகவும் செயல்பட்டதாக கூறி கரூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது 

இந்த இரு வழக்குகளிலும் முன் ஜாமீன் கோரி எம் ஆர் விஜயபாஸ்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்திருந்தார். 

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி என். ஆனந்த் வெங்கடேஷ்,  இரண்டு வழக்குகளிலும் விஜயபாஸ்கருக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.

 ஒரு வாரத்தில் கரூர் நீதிமன்றத்தில் ஆஜராகி முன்ஜாமீனை பெற்றுக்கொள்ள உத்தரவிட்ட நீதிபதி, அவ்வாறு ஆஜரானது குறித்து ஜூலை 20ஆம் தேதி தெரிவிக்க வேண்டுமென உத்தரவிட்டுள்ளார்.

இதையும்  படிக்க   | செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர்களின் வாதம் நிறைவு .! நாளை அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்படும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com