கார் மீது காலணி வீசிய விவகாரம்...கட்சியிலிருந்து நீக்கிய அண்ணாமலை..!

கார் மீது காலணி வீசிய விவகாரம்...கட்சியிலிருந்து நீக்கிய அண்ணாமலை..!
Published on
Updated on
1 min read

மதுரை மாநகர் பாஜக தலைவர் சரவணனன் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார்…

பாஜகவில் இருந்து விலகுகிறேன்: 

ராணுவ வீரர் லட்சுமணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது பாஜகவினர் காலணி வீசினர். இதையடுத்து நிதியமைச்சரை நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்த மதுரை மாவட்ட பாஜக தலைவர் சரவணன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது பேசிய அவர், பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

மத அரசியல் வேண்டாம்:

தொடர்ந்து பேசிய அவர், மத அரசியல் தனக்கு ஒத்துவரவில்லை எனவும், ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு சுயமரியாதையுடன் இருக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.

கட்சியில் இருந்து நீக்கிய அண்ணாமலை:

மதுரை மாவட்ட பாஜக தலைவர் சரவணனின் செய்தியாளர்கள் சந்திப்புக்கு பிறகு,  சரவணனனை கட்சியில் இருந்து நீக்குவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மதுரை மாநகர் மாவட்ட பாஜக தலைவர் டாக்டர். சரவணன் கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டு வருவதால், அவர் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக  தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com