”எய்ம்ஸ் மருத்துவமனையால் தென்னிந்தியாவின் மருத்துவ மாநகராகும் மதுரை” - அண்ணாமலை

”எய்ம்ஸ் மருத்துவமனையால் தென்னிந்தியாவின் மருத்துவ மாநகராகும் மதுரை” - அண்ணாமலை
Published on
Updated on
1 min read

எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்பட்ட பின்னர் தென் இந்தியாவின் மருத்துவ மாநகராக மதுரை மாறும் என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

”என் மண் என் மக்கள்” என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டுள்ள பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, மதுரை மாவட்டம் ஒத்தக்கடை மறறும் செல்லூர் பகுதியில் 9-வது நாள் நடைபயணத்தில் ஈடுபட்டார். அப்போது மக்களிடையே உரையாற்றிய அவர், இது கட்சி யாத்திரை அல்ல; மக்களுக்கான யாத்திரை என்றார்.

மக்கள் முன்பாக மோடியை கொண்டு செல்வதற்கான யாத்திரை என்று தெரிவித்த அண்ணாமலை, 9 ஆண்டு கால மத்திய அரசின் சாதனைகளை எடுத்துரைத்தார்.

தொடர்ந்து பேசிய அவர், மதுரையில் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி திறக்கப்பட்டு விட்டது என்றும், 2026-ம் ஆண்டுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனையை பிரதமர் திறந்து வைக்க உள்ளார் என்றும் கூறினார். எய்ம்ஸ் மருத்துவமனை மட்டும் திறக்கப்பட்டுவிட்டால், தென் இந்தியாவின் மருத்துவ மாநகராக மதுரை மாறும் என்றும் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்தார். 

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com