இந்து முன்னணி சார்பில் ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் முருகர் மாநாடு இன்று மதுரை அம்மா திடலில் நடந்து கொண்டிருக்கிறது. இந்த மாநாட்டிற்காக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே அனைத்து கட்சியை சேர்ந்த தலைவர்களுக்கும் இந்து முன்னணியினர் அழைப்பு விடுத்திருந்தனர். மாநாட்டை முன்னிட்டு அம்மா திடலில் ஆறுபடை முருகர் கோவில்களின் மாதிரிகளை அமைத்துள்ளனர்.
காலை முதலே பல்லாயிரக்கணக்கான மக்கள் அம்மா திடலில் குவிந்து வருகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. முருகர் மாநாட்டின் முக்கிய நிகழ்வான “கந்த சஷ்டி கவசம் பாடுதல்” மாலை ஆறு மணியளவில் நடைபெற இருக்கும் நிலையில் தற்போது மேடையில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.
அமைச்சர்கள் மற்றும் ஆதீனங்கள் வருகை
மதுரை பக்தர்கள் மாநாட்டிற்கு ஆதீனங்கள், மடாதிபதிகள் வருகை தந்து மேடையில் அமர்ந்துள்ளனர். மேலும் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி உதயகுமார் மற்றும் கடம்பூர் ராஜூ வருகை தந்துள்ளனர். ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாணம் நிகழ்ச்சிக்கு வருகை தந்து கொண்டுள்ளார்.
தமிழகத்தின் முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் ஆந்திர பாஜக நிர்வாகியான சுதாகர் ரெட்டி மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் நிகழ்ச்சிக்கு வருகை தந்துள்ளனர்.
காடேஸ்வரா சுப்ரமணியம்
இந்து முன்னணி சார்பில் பேசிய சுப்பிரமணி அவர்கள் “அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இந்த மாநாட்டிற்கு கூட்டம் வரக்கூடாது, என 4 நாட்களாக விரதம் இருந்தாராம். இந்த மாநாட்டிற்கு விளம்பரம் நாங்கள் கொடுக்கவில்லை. சேகர் பாபுவும், திருமாவளவனும், வைகோவும் தான் இந்த மாநாட்டிற்கு விளம்பரம் தேடித் தந்தார்கள்.
தமிழகத்தில் ஆன்மிகம் வளர்ந்து கொண்டு இருக்கிறது. இது அரசியல் மாநாடு அல்ல. முதலமைச்சருக்கும் இந்த மாநாட்டில் அழைப்புக் கொடுக்க அனுமதி கேட்டு கடிதம் அனுப்பினோம், அவரிடம் இருந்து பதில் இல்லை. அவர் வந்திருந்தால் இந்த மேடை அவருக்கும் கிடைத்திருக்கும்" என பேசியுள்ளார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.