
வாரிசுகள் கட்சிக்குள் வைத்தாலே தலைவர்கள் கவனமாக நடந்துகொள்ள வேண்டியது அவசியம். அதற்கு பல உதாரணங்களை நாம் வாழும் காலகட்டத்திலேயே நடக்கின்றது. அதற்கு மிகப்பெரும் உதாரணம் தான் பாமக -வில் நிலவும் தந்தை -மகன் மோதல்.
இந்த நிலையில்தான் செயல்வீரர்கள் கூட்டத்தில் வைக்கப்பட்ட பேனர்களில் மல்லை சத்யா படம் இடம்பெறாறது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
2021ம் ஆண்டு அக்டோபர் 20ந்தேதி நடைபெற்ற மதிமுகஉயர் நிலைக் குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, தலைமைக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில், வைகோவின் மகன் துரை வைகோவுக்கு கட்சியில் பதவி கொடுக்கப்பட்டது. கட்சி பணியே செய்யாத ஒருவருக்கு கட்சி பதவி கொடுத்தது மதிமுக தலைவர்கள் மற்றும் தொண்டர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து, மதிமுக மாநில இளைஞரணிச் செயலாளர் ஈஸ்வரன், மதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்தார். மேலும் பலர் விலகினர். அத்துடன், மதிமுக தொடங்கியது முதல் உடன் இருக்கும் மல்லை சத்யா புறக்கணிக்கப்பட்டு வைகோவின் மகன் என்ற காரணத்திற்காக பதவி வழங்கபட்டதாக பல பிரச்சனைகள் எழுந்த வண்ணம் இருந்தன.
அதன் நீட்சியாக வைகோ - துரை வைகோ பிரச்சினை தற்போது உருவெடுத்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன் துரை வைகோவுக்கும், மதிமுக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது. “அப்போது துரை வைகோ கட்சியை விட்டே விலக உள்ளதாக’ அறிக்கை வெளியிட்டார். இந்த பிரச்னையில்தான் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மூத்த தலைவர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர்.
அதனை தொடர்ந்து தற்போது வைகோ - துரை வைகோ பிரச்சினை தற்போது உருவெடுத்துள்ளது.கடந்த சில மாதங்களுக்கு முன் துரை வைகோவுக்கும், மதிமுக கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே கருத்து மோதல்கள் ஏற்பட்டது. “அப்போது துரை வைகோ கட்சியை விட்டே விலக உள்ளதாக’ அறிக்கை வெளியிட்டார். இந்த பிரச்னையில்தான் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும் மூத்த தலைவர்கள் தலையிட்டு இருவரையும் சமாதானம் செய்து வைத்தனர்.
வைகோ மற்றும் துரை வைகோ தலைமையில் இன்று ( ஜூலை 10) சென்னையில் நடைபெற்ற செயல்வீரர்கள் கூட்டத்தில் பேனர்கள் வைக்கப்பட்டிருக்கிறது. அதில் மல்லை சத்யாவின் புகைப்படம் இடம்பெறாதது சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. மேலும் மல்லை சத்யா கட்சியில் இருந்து விலக இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்நிலையில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்த வைகோ, ” மல்லை சத்யாவை உடன் பிறவாத தம்பியாகத் தான் நினைத்தேன். என்னைப் பற்றி மிக மோசமாக, பேசக்கூடிய நபர்களுடன் தொடர்பில் இருக்கிறார். பிரபாகரனுக்கு மாத்தையா துரோகம் செய்தது போல எனக்கு மல்லை சத்யா துரோகம் செய்துவிட்டார். கட்சியில் இருந்து யார் வெளியேறினாலும் தாராளமாக வெளியேறி கொள்ளலாம், யார் வெளியேறினாலும் கட்சிக்கு எந்த பாதிப்பும் இருக்காது. மல்லை சத்யாவின் பின்னணியில் திமுக இருப்பதாக கூறமுடியாது. அது உண்மையும் இல்லை” என்று கூறியிருக்கிறார்.
இதனைத்தொடர்ந்து வைகோ குறித்து தனியார் ஊடகத்திடம் பேசிய மல்லை சத்யா, “வைகோ சொன்ன வர்த்தையைத் தாங்கி கொள்ள முடியாத மனவேதனையில் இருக்கிறேன். குடும்ப அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கிய வைகோ, துரை வைகோவுக்கு கட்சித் தலைமையை வழங்குவதற்குத் தயாராகி விட்டார், என பேசியிருக்கிறார்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.