உலகம் முழுமைக்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள்தான் அதிக பணம் கொழிக்கும் தொழில் முனையங்களாக மாறி உள்ளன. ஆகையால் தான் ஐ.டி ஊழியர்களுக்கான மவுசு பெருகிவருகிறது. ஆனாலும், ஐ.டி ஊழியர்களின் பணிச்சுமையும், மன அழுத்தமும் மிகவும் சிக்கலானது. மேலும் ‘It culture’ சுய வாழ்க்கையே இல்லாமல் ஆக்கி விடும் அளவுக்கு மோசமான ஒன்று. அதுவும் ஒரு நவீன கொத்தடிமைத்தனம் தான்.
பேரிடர் காலங்கள், கடினமான நேரங்கள் என எல்லா காலக்கட்டங்களிலும், மனித் தன்மையற்ற பல கார்ப்பரேட் நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன.
அப்படியான செய்திகளை நாம் அதிகம் ‘ரெட்டிட்’ தளங்களில் காண்கிறோம். அப்படி ஒரு அதிர்ச்சியான சம்பவம் தான் மீண்டும் நிகழ்ந்துள்ளது.
ஊழியர் ஒருவர் தனது மேலாளரிடம், தனது மனைவி பிரசவத்திற்காக 2 நாள் மட்டும் விடுமுறை வேண்டும் எனக் கேட்டுள்ளார். அதற்கு அந்த மேனேஜர் அளித்த பதில்தான் நெட்டிசன்கள் மத்தியில் கடுப்பை கிளப்பியுள்ளது. அவர் பகிர்ந்த சேட்டில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
ஊழியர்: சார் எனது மனைவி பிரசவத்திற்காக எனக்கு 2 நாள் லீவு வேண்டும்.
மேலாளர்: இப்போதைக்கு லீவு தர முடியாது, அடுத்து வரம் வேண்டுமென்றால் எடுத்துக்கொள்ளுங்கள்.
ஊழியர்: சார், இது எனது மனைவிக்கு முதல் பிரசவம்.
மேலாளர்; உங்களால் மருத்துவமனையில் இருந்து வேலை பார்க்க முடியுமா? உங்கள் பெற்றோர் உடன் இருக்கிறார்களா!?
ஊழியர்: ஆம். ஆனால் என்னால் எங்கிருந்து வேலை பார்க்க முடியாது. நிச்சயம் லீவு வேண்டும்.
மேலும் என அந்த மெசேஜில் ‘உங்கள் மனைவி பிரசவத்திற்கு நீங்கள் என்ன செய்யப்போகிறீர்கள்? என்றெல்லாம் கேள்வி எழுப்பியிருக்கிறார், இருந்தாலும் வேறு வழியின்றி அவருக்கு 2 நாள் விடுப்பு வழங்கி உள்ளார்.
இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் மனைவி பிரசவத்திற்கு கூட விடுப்பு வழங்காத மேலாளரை நெட்டிசன்கள் வறுத்தெடுத்து வருகின்றனர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.