மணிப்பூர் விவகாரம்; மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு!

மணிப்பூர் விவகாரம்; மெரினாவில் போலீஸ் பாதுகாப்பு!

Published on

மணிப்பூரில் தொடர்ந்து வரும் கலவரத்தில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணப்படுத்தப்பட்டு பாலியல் சீண்டுதல் செய்த காணொளி நாட்டையே உலுக்கியுள்ளது. 

இதன் எதிரொலியாக மெரினாவில் ஆர்ப்பாட்டக்காரர்கள் ஒன்று கூட இருப்பதாக உளவுத்துறை கொடுத்த தகவலின் அடிப்படையில் கலங்கரை விளக்கம் முதல் கண்ணகி சிலை வரை போலீஸ் பாதுகாப்பு  போடப்பட்டுள்ளது. இதில் போராட்டக்காரர்கள் யாரும் மெரினா கடற்கரை வராத வண்ணம் தீவிர கண்காணிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். இப்பணியில், ஒரு காவல் ஆய்வாளர் தலைமையில் 4 உதவி ஆய்வாளர்கள் என மொத்தம் 40 போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

முன்னதாக, நேற்று மாலை மே 17 ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி தலைமையில் செல்போன் டார்ச் லைட் அடித்து போராட்டம் செய்யப்பட்டதும், அந்த சம்பவத்தில் திருமுருகன் காந்தி உள்ளிட்ட 36 நபர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com