முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்...இரவு நேரத்தில் வீடு புகுந்து கொள்ளை முயற்சி...!!

திருச்சி மாவட்டம் துறையூரில் அருகே இரவு நேரத்தில் வீடு புகுந்த முகமூடி கொள்ளையர்கள், கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முகமூடி கொள்ளையர்கள் அட்டகாசம்...இரவு நேரத்தில் வீடு புகுந்து கொள்ளை முயற்சி...!!
Published on
Updated on
1 min read

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த தின்னனூர் கிராமத்தில் மகாலிங்கம் என்பவருக்கு சொந்தமான வீட்டில் வசித்து வருபவர் அரவிந்தன். இவரது மனைவி ரேணுகாதேவி, இவர்களுக்கு  திருமணமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில் தனியாக குடித்தனம் நடத்திவருகின்றனர்.

அரவிந்தன் கேட்டரிங் முடித்து சமையல் மாஸ்டர் ஆக உள்ளார். இதற்கிடையில் இவர், நேற்று நள்ளிரவு பக்கத்து வீட்டின் கதவு உடைக்கப்படும் சத்தம் கேட்டு பயந்து அருகில் இருந்த தனது உறவினரான யோகேஸ்வரன் என்பவருக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளார்

தகவலறிந்து வந்த யோகேஸ்வரன் அப்பகுதியில் தனியாக இருட்டில் நின்று கொண்டிருந்த நபரிடம் திருடர்கள் எங்கே என்று கேட்கிறார், அந்தசமயம் கருப்பு டவுசர் கருப்பு பனியன் மற்றும் கருப்பு முகமூடி அணிந்த நபர் திரும்புவதை கண்டு அதிர்ச்சியாகி உள்ளார்.

அப்போதுதான் தெரிகிறது திருடன் இடமே திருடன் யார் என்று கேட்ட விஷயம் சுதாரித்து திரும்புவதற்குள் முகமூடி நபர் கையில் வைத்திருந்த கட்டையால் யோகேஸ்வரை பலமாக தாக்க, அவர் அலறல் சத்தம் கேட்டு பொதுமக்கள் ஓடி வர அதற்குள் முகமூடி கொள்ளையர்கள் காட்டுப்பகுதிக்குள் சென்று மறைந்து கொண்டனர்.

இது தொடர்பாக புலிவலம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வந்த போலீசார், தாக்கிவிட்டு தப்பியோடிய முகமூடி கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com