சென்னை மாநகராட்சியின் மாதாந்திர மாமன்ற கூட்டத் தொடர் சென்னை ரிப்பன் மாளிகையில் உள்ள மாமன்ற கூட்ட அரங்கில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கேள்வி நேரத்தின் போது பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன் கேள்வி எழுப்பி பேசினார்.
அப்போது பேசிய அவர், "சென்னை மாநகராட்சிக்கு எவ்வளவு கடன் உள்ளது? என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதில் அளித்து பேசிய மேயர் பிரியா, "1.1.2025 வரை சென்னை மாநகராட்சிக்கு ரூ. 3,065.65 கோடி கடன் உள்ளது. அதில் ரூ. 1577.10 கோடி செலுத்தப்பட்டுள்ளது. ரூ. 1488.50 கோடி நிலுவையில் உள்ளது. இந்த கடனுக்காக வட்டி மட்டும் ரூ.8.5 கோடி செலுத்தப்பட்டு வருவதோடு, ஒவ்வொரு காலாண்டுக்கு ஒரு முறை அசல் செலுத்தி வருவதாகவும்", தெரிவித்தார்.