டிசம்பர் மாதம் வரை மருத்துவ முகாம்கள் நடைபெறும் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Published on
Updated on
1 min read

வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு, தமிழ்நாட்டில் நாளை முதல் மருத்துவ முகாம்கள் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை  தேனாம்பேட்டையில் உள்ள டி.எம்.எஸ் வளாகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், நவம்பர் மாதம் 4 ஆம் தேதி ”நடப்போம் நலம் பெறுவோம்” என்ற திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசியவர், பருவ மழைக்கால நோய்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நவம்பர் 5,12,19, 26 மற்றும் டிசம்பர் 5,17,31 ஆகிய தேதிகளில் மருத்துவ முகாம்கள் நடைபெறவுள்ளதாக கூறினார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com