"சீரழிந்து வரும் மருத்துவத்துறை" குற்றம் சாட்டும் எடப்பாடி!

"சீரழிந்து வரும் மருத்துவத்துறை" குற்றம் சாட்டும் எடப்பாடி!

Published on

தமிழ்நாடு மருத்துவத்துறை தொடர்ந்து சீரழிந்து வருவதாக எதிர் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டியுள்ளார்.

தமிழ்நாட்டில் மருத்துவத்துறை தொடர்ந்து சீரழிந்து வருவதாக குற்றம் சாட்டிய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பகுதியை சேர்ந்த தனிஷ் - ஷைனி தம்பதியினர், தனது 3 வயது குழந்தையை காய்ச்சல் காரணமாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு குழந்தையின் உடல்நிலையை சோதனை செய்யாமலேயே, வெறிநாய் கடிக்கான மருத்துவ சிகிச்சை அளித்துள்ளனர். அதோடு, ஒருகட்டத்தில் குழந்தை இறந்துவிட்டதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர், குழந்தையின் உடலில் அசைவு இருப்பதை கண்டறிந்து, உடனடியாக குழந்தையை கேரளா மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்ததாகவும், குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் எலிக்காய்ச்சல் இருப்பதை கண்டறிந்து, அதற்குண்டான சிகிச்சைகளை துரித நிலையில் மேற்கொண்டதாக  அரசு மருத்துவமனை மீது புகார் தெரிவித்தள்ளார். 

உயிருக்கு போராடி வரும் குழந்தையை இறந்து விட்டதாக கூறியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அவர், சமீபகலமாக அரசு மருத்துவமனைக்கு வரும் சாமானியர்களின் கை, கால் உள்ளிட்ட உறுப்புகளும், உயிரும் போகும் அவல நிலை ஏற்பட்டுள்ளதாக சாடியுள்ளார். 

அரசு மருத்துவமனைகளில் சளி, காய்ச்சல் என்று சென்றாலும் வெறிநாய்க் கடி ஊசி போடப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள அவர், உண்மையில் வெறி நாய் கடித்து சிகிச்சைக்கு சென்றால், அவர்களுக்கு ஊசி இல்லை என்று கூறும் நிலையே உள்ளதாக சாடியுள்ளார். 

சுகாதாரத்துறை அமைச்சர், துறையை கவனிக்காமல், விளையாட்டு பயிற்சியாளராக வலம் வருவதாக புகார் தெரிவித்துள்ள எடப்பாடி பழனிச்சாமி, இனியாவது துறை மீது கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com